Last Updated : 22 Mar, 2017 10:12 AM

 

Published : 22 Mar 2017 10:12 AM
Last Updated : 22 Mar 2017 10:12 AM

நட்புரீதியிலான கால்பந்து போட்டி: இந்தியா-கம்போடியா இன்று மோதல்

நட்புரீதியிலான கால்பந்து போட்டி யில் இந்தியா-கம்போடியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் கம்போடியாவின் நாம்பெந்த் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

ஆசிய கால்பந்து கூட்ட மைப்பு சார்பில் 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் வரும் 28-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. தகுதிப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் கிர்கிஸ்தான், மியான்மர், மக்காவு ஆகிய அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வரும் 28-ம் மியான் மருடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் யங்கூனில் நடைபெறு கிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய கால்பந்து அணி, கம்போடியாவுக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டத்தில் இன்று மோத உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் கம்போடியா சென்றுள்ளனர். பிபா தரவரிசை பட்டியலில் இந்தியா 132-வது இடத்திலும், கம்போடியா 173-வது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் ஆசிய கால் பந்து போட்டி தகுதி சுற்றுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடைசியாக இந்திய அணி நட்புரீதியிலான ஆட்டத்தில் புயிர்டோ ரிகோ அணியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

அதன் பின்னர் தற்போதுதான் நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கிறது. கடைசியாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நேரு கோப்பையில் கம்போடியாவை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. கம்போடியா அணி விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

மாறாக இந்திய அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே வேளையில் வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களில் ஆசிய நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற 5 ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் சிங்

தற்போதைய இந்திய அணி யில் இளம் வீரர்களான ஜெர்ரி லார்லின்சூலா, மிலன் சிங், நிஷூ குமார், டேனியல் லால்லிம்புயா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அர்னாப் மோன்தால், சந்தேஷ் ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அனஸ் எடதோடிகா இன்றைய ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும்.

ஸ்டிரைக்கர் ராபின் சிங், காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பி உள்ளது அணியை வலுப்படுத்தி உள்ளது. நட்சத்திர வீரரான சுனில் ஷேத்ரியை உள்ள டக்கிய இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 4-2-3-1 என்ற பார்மட் டில் களமிறங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்த ஆட்டம் புல்வெளி தரையில் இல்லாமல் செயற்கை இழையால் ஆன தரை யில் நடத்தப்படுகிறது.

மேலும் இரு மோதல்

கம்போடியா அணியுடனான மோதலை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி லெபனான் அணி யுடனும், அக்டோபர் 2-ம் தேதி பாலஸ்தீனம் அணியுடனும் இந்திய அணி நட்புரீதியிலான ஆட்டங்களில் மோத உள்ளது. இரு ஆட்டங்களும் நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x