Last Updated : 31 Jan, 2017 10:18 AM

 

Published : 31 Jan 2017 10:18 AM
Last Updated : 31 Jan 2017 10:18 AM

நடுவர் குறித்து புகார் அளிக்க இங்கிலாந்து அணி முடிவு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 ஆட்டத்தில் தவறான முடிவுகளை கொடுத்த நடுவர் மீது புகார் கொடுக்க இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற இந்தியா வுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முன்னணி வீரரான ஜோ ரூட் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பந்து பேட்டில் பட்டது என்றும் நடுவர் சம்சுதின் இதை சரியாக கவனிக்காமல் தவறான தீர்ப்பு கொடுத்ததால் ஆட்டத்தின் முடிவே மாறிவிட்ட தாகவும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, ‘‘நடுவரின் முடிவுகள் குறித்து அடுத்த போட்டிக்கு முன்னதாக மேட்ச் ரெப்ரியிடம் தெரிவிப்போம். டி 20 போட்டிகளில் டிஆர்எஸ் முறையை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பது தெரியவில்லை.

கடைசி ஓவரில் நடைபெற்ற சம்பவம் வெறுப்படைய செய்தது. மேலும் அது ஆட்டத்தின் முடிவை அப்படியே மாற்றி விட்டது. ஜோ ரூட் போன்ற ஒரு வீரரரை முதல் பந்திலேயே இழப்பது என்பது எளிதான காரியம் இல்லை.

அந்த தருணம் சுத்தியலை கொண்டு அடிப்பது போல இருந்தது. அவரது விக்கெட் விலை மதிப்புடையது என்பது நிரூபண மானது. ஒருசில முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம் அது’’ என்றார்.

இதேபோன்று ஆட்டம் தொடங்கி 3-வது ஓவரில் ஜோர்டான் வீசிய 2-வது பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆன் திசையில் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து தாழ்வாக வந்து கோலியின் பேடைத் தாக்கியது.

இங்கிலாந்து வீரர்கள் முறையீடு செய்த போதும் நடுவர் அவுட் வழங்க மறுத்தார். சந்தேகத்தின் பலனை அவர் கோலிக்கு சார்பாக அளித் தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து நேராக மிடில் ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x