Last Updated : 20 Sep, 2015 12:37 PM

 

Published : 20 Sep 2015 12:37 PM
Last Updated : 20 Sep 2015 12:37 PM

தொடரை வெல்வது யார்? - இந்தியா - வங்கதேச ‘ஏ’ அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியா-வங்கதேச ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் இன்று நடை பெறுகிறது.

இரண்டு போட்டிகள் முடிந் துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. எனவே இன்றைய போட் டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. முதல் போட்டியில் ஆல்ரவுண்டர் குருகீரத் சிங் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தியதால் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வங்கதேச வீரர் நாசிர் ஹுசைன் சதமடித்ததோடு, 5 விக் கெட்டுகளை வீழ்த்தியதால் அந்த அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் நாசிர் ஹுசை னின் சுழல், ரூபெல் ஹுசைனின் மித வேகத்தில் சரணடைந்த இந்திய வீரர்கள், இன்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்க முயற் சிப்பார்கள் என தெரிகிறது. இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், யாரும் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இன்றைய போட்டியைப் பொறுத்தவரையில் மயங்க் அகர் வால்-கேப்டன் உன்முக்த் சந்த் ஜோடி சிறப்பான தொடக் கம் ஏற்படுத்தித் தருவது அவசிய மாகும். மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, கருண் நாயர், குருகீரத் சிங், சஞ்சு சாம்சன் ஆகியோரை நம்பியுள்ளது இந்தியா. இவர்களில் ரெய்னா கடந்த 2 போட்டிகளிலும் சேர்த்து 33 ரன்களே எடுத்துள்ளார். எனவே அவர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். மணீஷ் பாண்டே ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார். குருகீரத் சிங்கின் ஆட்டம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபட வில்லை. கடந்த போட்டியில் ரஷ் கலாரியா ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் நாத் அரவிந்த் 10 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங் கியபோதும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. எனவே மித வேகப் பந்து வீச்சாளர் ரிஷி தவன், சுழற் பந்து வீச்சாளர்களான குருகீரத் சிங், கரண் சர்மா ஆகியோரையே நம்பியுள்ளது இந்தியா.

வங்கதேச அணியில் ஏராள மான சர்வதேச வீரர்கள் இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு பலமாகும். பேட்டிங்கில் சவும்ய சர்க்கார், அனாமுல் ஹக், கேப்டன் மோமினுல் ஹக், லிட்டன் தாஸ், சபீர் ரஹ்மான், நாசிர் ஹுசைன் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த போட்டியில் சதமடித்த நாசிர் ஹுசைன் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷபியுல் இஸ்லாம், அல் அமீன் ஹுசைன், ரூபெல் ஹுசைன், அராபத் சன்னி, நாசிர் ஹுசைன் என வலுவான பவுலர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x