Published : 30 Dec 2016 10:27 AM
Last Updated : 30 Dec 2016 10:27 AM

தேசிய சீனியர் வாலிபால்: இந்தியன் ரயில்வே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜேப்பியார் இன்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 65-வது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் ரயில்வே - ஆந்திரா அணிகள் மோதின.

இதில் இந்தியன் ரயில்வே அணி 25-12, 25-12, 25-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் கேரளா அணி 25-18, 21-25, 25-21, 25-14 என்ற செட் கணக்கில் மகாராஷ்ராவை தோற்கடித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே - கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் ரயில்வே - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் இந்தியன் ரயில்வே அணி 25-17, 25-23, 22-25, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் கேரளா 19-25, 25-19, 25-23, 25-16 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியன் ரயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x