Published : 20 Sep 2015 03:24 PM
Last Updated : 20 Sep 2015 03:24 PM

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் குர்கீரத்துக்கு வாய்ப்பு: டி-20 அணியில் அரவிந்த், ஹர்பஜனுக்கு இடம்; ஜடேஜா நீக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் பஞ்சாப் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் இடம்பெற்றுள்ளார். டி-20 அணியில் ஹர்பஜன், வேகப்பந்து வீச்சாளர் நாத் அரவிந்த் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா எந்த அணியிலும் இடம்பிடிக்கவில்லை.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப் பிரிக்க அணி, 3 டி-20 போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் பாட்டில் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு 3 டி-20 மற்றும் முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில், பஞ்சாப் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் இடம்பிடித்துள்ளார். ஆஸ்தி ரேலியா ஏ, தென்னாப்பிரிக்க ஏ, வங்கதேச ஏ அணிகளுக்கு எதிராக இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டராக அசத்தியதற்காக இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

அதேபோன்று, டி-20 அணியில், கர்நாடகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நாத் அரவிந்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா நீக்கம்

வங்கதேச சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஜிம்பாப்வே தொடரில் நீக்கப்பட்ட ஜடேஜாவுக்கு தற் போதும் வாய்ப்பளிக்கப்பட வில்லை.

காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் விலகிய ஷிகர் தவணுக்கு டி-20, ஒரு நாள் ஆகிய இரு அணிகளிலும் இடம் கிடைத்துள்ளது.

ஹர்பஜன்

இலங்கை தொடரில் அசத்திய அமித் மிஸ்ரா இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார். ஹர்பஜனுக்கு டி-20 அணியில் இடம் கிடைத் துள்ளது. டி-20 அணியில் இடம் பிடித்திருந்த கரண் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக அவதிப் பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி, அணியில் சேர்ப்பதற்கு பரிசீலிக்கப்படவில் லை.

தோனி கேப்டன்

இரு அணிகளுக்கும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல் படுவார். வரும் அக்டோபர் 2-ம் தேதி டி-20 தொடர் தொடங்குகிறது.

ஒருநாள் அணி (முதல் மூன்று போட்டிகள்)

தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், அக்ஸர் படேல், குர்கீரத் சிங் மான், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ்.

டி-20 அணி

தோனி (கேப்டன்), ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, அமித் மிஸ்ரா, எஸ். அரவிந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x