Published : 05 Jan 2017 09:41 AM
Last Updated : 05 Jan 2017 09:41 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி- 117-ம் நிலை வீரரான கோவிலக்கிடம் போராடி வீழ்ந்தார்

தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதா னத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது நாளான நேற்று போட்டி தரவரிசையில் முதலிடமும் உலக தரவரிசையில் 6-வது இடமும் வகிக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் தனது 2-வது சுற்றில் தகுதி நிலை வீரரான சுலோவேகியாவின் ஜோசப் கோவிலக்குடன் மோதினார்.

இதில் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள ஜோசப் கோவிலக் முதல் செட்டில் அருமையாக விளையாடினார். மரின் சிலிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்த அவர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். 2-வது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் முதல் 3 கேம்களை தொடர்ச்சியாக கைப்பற்றினார். 0-3 என பின்தங்கிய நிலையில் இருந்த கோவிலக் ஆக்ரோஷமாக விளையாடி 5-5 என சமநிலையை எட்டினார். ஆனால் கடைசி இரண்டு கேமை மரின் சிலிச் கைப்பற்ற 2-வது செட்டை அவர் 7-5 தன்வசப்படுத்தினார்.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றி யதால் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய 3-வது செட் மேலும் விறுவிறுப்பானது. கடைசி வரை சவால் கொடுத்த கோவிலக் இந்த செட்டை 7-5 என கைப்பற்றினார்.

முடிவில், சென்னை ஓபனில் இரண்டு முறை சாம்பியன் வென்ற மரின் சிலிச்சை 7-6, 5-7, 7-5 என்ற செட்கணக்கில் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் போராடி வீழ்த்திய கோவிலக் கால் இறுதிக்கு முன்னேறினார்.

கோர்ட் 1-ல் நடைபெற்ற ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் தனது 2-வது சுற்றில் 86-ம் நிலை வீரரான பெல்ஜி யத்தின் ஸ்டீவ் டார்சிஸூடன் மோதினார். சுமார் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆல்பர்ட் ரமோஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி முதல் சுற்றில் பிரேசிலின் மார்செலோ டெமோலைனர் - குரேஷியாவின் நிக்கோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இன்றைய ஆட்டங்கள்

ராபர்ட்டோ அகுட் தத்ரா சில்வா

மிகைல் யூஸ்னி ரென்சோ ஆலிவோ

யூகி பாம்ப்ரி பெனோயிட் பேர்

அல்ஜாஸ் பெடன் மார்ட்டின் கிளிசான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x