Last Updated : 16 May, 2016 09:30 AM

 

Published : 16 May 2016 09:30 AM
Last Updated : 16 May 2016 09:30 AM

சிறப்பான பந்துவீச்சால் புனே அணியை வென்றோம்: கவுதம் காம்பீர் கருத்து

சிறப்பான பந்துவீச்சால் ஐபிஎல் போட்டியில் புனே அணியை வென்றோம் என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் புனே அணியால் அதிக ரன்களைக் குவிக்க முடியவில்லை. அந்த அணியில் பெய்லி மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக புனே அணி 17.4 ஓவர்களில் 6 விக் கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக் கிட்டது. அப்போது தோனி 22 பந்து களில் 8 ரன்களோடும், அஸ்வின் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடிக்கொண்டிருந்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

மழை காரணமாக ஆட்டம் நீண்டநேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது கொல்கத்தா அணி வெற்றிபெற 9 ஓவர்களில் 66 ரன்களை எடுக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் யூசுப் பதான் 18 பந்துகளில் 37 ரன்களைக் குவிக்க, 5 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களைக் குவித்து கொல்கத்தா வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 14 புள்ளிகளைப் பெற்று கொல்கத்தா அணி 2-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றியைப் பற்றி நிருபர்களிடம் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர், “இன்றைய போட்டியில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்கள். அதைப் பின்பற்றி சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசி புனேவைக் கட்டுப்படுத்தினார்கள். பியூஷ் சாவ்லா, சுனில் நரைன் ஆகியோர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றி விட்டார்கள். சிறப்பான பந்துவீச்சால் புனே அணியை வென்றோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x