Published : 31 May 2016 09:39 AM
Last Updated : 31 May 2016 09:39 AM

ஐபிஎல் துளிகள்: கோலிக்கு ஆரஞ்சு தொப்பி

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆரஞ்சு நிற தொப்பியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 4 சதம், 7 அரைசதம் உட்பட மொத்தம் 973 ரன்கள் குவித்து தட்டிச்சென்றார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்து வீச்சாளரை ஊதா நிற தொப்பி அலங்கரிக்கும். இந்த முறை ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 23 விக்கெட்களுடன் ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.

********

3-வது முறையாக அம்பேல்

2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வி கண்டிருந்த பெங்களூரு அணி, இப்போது 3-வது முறையாக தோல்வியடைந்து கோப்பையை பறிகொடுத்துள்ளது.

இருமுறை கோப்பையை வெல்லாத குறையை இந்த சீசனில் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஆடிய கோலி அணியை இந்த முறையும் துரதிருஷ்டம் விட்டு வைக்க வில்லை.

********

9 ஆயிரம் ரன்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கிறிஸ் கெயில் 38 பந்தில் 76 ரன் எடுத்தார். இதன் மூலம் அவர் டி 20 ஆட்டங்களில் 9 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 254 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர் 9066 ரன்கள் குவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x