Last Updated : 18 Jan, 2017 09:53 AM

 

Published : 18 Jan 2017 09:53 AM
Last Updated : 18 Jan 2017 09:53 AM

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: அகமதாபாத் நகரில் அமைக்கப்படுகிறது

ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அகமதாபாத்தில் அமைக்கப்படுகிறது. 63 ஏக்கர் பரப்பளவில் இந்த ஸ்டேடியம் அமையவுள்ளது.

இந்த ஸ்டேடியத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரான பரிமள் நத்வானி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நத்வானி, “சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம் அமைந்துள்ள இடத்தில் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இந்த மைதானத்தில் 4 டிரஸ்ஸிங் ரூம்களும், நவீன வசதி கொண்ட 76 கார்ப்பரேட் பாக்ஸ்களும், பிரம்மாண்டமான நீச்சல் குளமும் அமைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x