Last Updated : 05 Jan, 2017 10:50 AM

 

Published : 05 Jan 2017 10:50 AM
Last Updated : 05 Jan 2017 10:50 AM

ஈடு இணையற்ற சாம்பியன் பட்டங்கள்: கேப்டனாக தோனியின் சாதனைத் துளிகள்

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீரென விலகினார். ஆனால் தோனியின் சாதனைகள் அவரிடமிருந்து விலக்க முடியாதவை.

> ஐசிசி-யின் 3 முக்கிய ஒருநாள் போட்டித் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனி. 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய முக்கிய ஐசிசி தொடர்களில் கோப்பையை வென்ற ஒரே கேப்டன். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையையும் இந்திய அணி தோனியின் தலைமையில் வென்றது. மேலும் குறைந்தது 5 அணிகள் பங்கேற்கும் குறைந்த ஓவர் தொடர்களில் 4 முறை இறுதியில் வென்றதன் மூலம் இம்ரான் கான், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார் தோனி.

> 199 போட்டிகளில் கேப்டன்சி செய்ததில் 110 ஒருநாள் போட்டிகளில் வென்றதன் மூலம் ரிக்கி பான்டிங்கிற்கு அடுத்த (165 வெற்றிகள்) இடத்தைப் பிடித்துள்ளார் தோனி.

> ஆலன் பார்டர் 100 ஒருநாள் வெற்றிகளைச் சாதித்துள்ளார். அசாருதீனைக் காட்டிலும் அதிகமாக 20 ஒருநாள் வெற்றிகளை கேப்டனாக தோனி பெற்றுள்ளார்.

> டி20 போட்டிகளில் 41 வெற்றிகளுடன் தோனிக்கு முதலிடம். இவருக்கு அடுத்த இடத்தில் டேரன் சாமி 27 டி20 வெற்றிகளுடன் உள்ளார். அதே போல் 72 டி20 போட்டிகளில் கேப்டன்சி என்பது கேப்டனாக அதிக போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

> 199 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியது இந்திய கேப்டனாக அதிக போட்டிகளாகும், உலக அளவில் 3-வது இடத்தில் தோனி உள்ளார். ரிக்கி பாண்டிங், நியூஸிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் தோனியை விட அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை தோனிக்கு அடுத்தபடியாக அசாருதீன் 174 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

> ஒருநாள் போட்டிகளில் தோனியின் வெற்றி தோல்வி விகிதம் 110-74. ராகுல் திராவிடின் ஒருநாள் வெற்றி தோல்வி விகிதம் 42-33.

> கீப்பர்/கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 6633 ரன்கள். இதில் இவருக்கு அருகில் ஒருவரும் இல்லை. சற்று தொலைவில் சங்கக்காரா கீப்பர்/கேப்டனாக 1756 ரன்களை எடுத்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் கீப்பர்/கேப்டனாக 1,000 ரன்களை எடுத்த ஒரே வீர்ர் தோனிதான். குறைந்த ஓவர் போட்டிகளில் மொத்தம் 271 போட்டிகளில் கீப்பர்/கேப்டனாக அவர் இருந்துள்ளார். இவருக்கு அருகில் வேறு கீப்பர்/கேப்டன் இல்லை.

> ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சராசரி 53.92. 1000 ரன்கள் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டால் கேப்டனாக 2-வது பெரிய சராசரியாகும் இது. ஏ.பி.டிவில்லியர்ஸ் சராசரி 65.92. குறைந்தது 5,000 ரன்கள் எடுத்த 7 கேப்டன்களில் பாண்டிங்கிற்கு அடுத்த சிறந்த சராசரி தோனியினுடையது.

> முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் தோனியின் வெற்றி-தோல்வி விகிதம் 7-4.

> இந்திய அணியின் ஒருநாள் போட்டி வெற்றிகளில் தோனியின் பேட்டிங் சராசரி 70.83. இதில் டிவில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர் அதிக சராசரி வைத்துள்ளனர். இந்திய வெற்றிகளில் தோனி 3,754 ரன்களை அடித்துள்ளார், இதில் 3 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும்.

> கேப்டனாக டி20 ஆட்டங்களில் வெற்றிபெறும் விரட்டல்களில் தோனி ஆட்டமிழக்காமல் 12 முறை இருந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தோனி வெற்றிபெற்ற விரட்டல்களில் 26 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதில் தோனிக்கே முதலிடம், 2-வது இடத்தில் அர்ஜுனா ரணதுங்கா, பிறகு அசாருதீன், ரிக்கி பாண்டிங் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x