Published : 06 Oct 2016 06:57 PM
Last Updated : 06 Oct 2016 06:57 PM

இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் ரெய்னா; அஸ்வின், ஜடேஜா, ஷமிக்கு ஓய்வு

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர்-ஜனவரி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய ஒருநாள்போட்டி அணியில் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் அணி வருமாறு:

தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, மணிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதர் ஜாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x