Published : 09 Jul 2017 09:53 AM
Last Updated : 09 Jul 2017 09:53 AM

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்: கெயில் புயலை இந்தியா சமாளிக்குமா?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் உட்பட முன் னணி வீரர்கள் பலரும் களம் இறங்க உள்ளதால் இந்திய அணிக்கு அது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற் போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இன்று களம் இறங்குகிறது.

ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியதால் இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இப் போட்டியில் களம் இறங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரஹானே மிகச் சிறப்பாக ஆடினார். இருப்பினும் டி20 போட்டிகளில் அவரால் சிறப் பாக ஆட முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் அவர் ரன்களைக் குவிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம். எனவே டி 20 போட்டியைப் பொறுத்தவரை ஷிகர் தவணுடன் சேர்ந்து விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக கோலி ஏற்கெனவே பல முறை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

விராட் கோலி தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்கும் பட்சத் தில், இளம் இந்திய வீரரான ரிஷப் பந்துக்கு இப்போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கி லாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் ஆடிய பிறகு அடுத்த வாய்ப்புக்காக ரிஷப் பந்த் நீண்ட காலமாக காத்திருக்கிறார். விக்கெட் கீப்பரான இவர், இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் தன் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் அதிர டியாக ஆடலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

ஒருநாள் போட்டித்தொடரில் வேகமாக ரன்களைக் குவிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தோனி மீது உள்ளது. இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று இளம் வீரரான ரிஷப் பந்துக்கு வழிவிட வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடி தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.

ஐபிஎல் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக் காக அதிக விக்கெட்களை வீழ்த் திய குல்தீப் யாதவ், இப்போட்டி யில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். அவருடன் சேர்ந்து புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டி20 போட்டிகளைப் பொறுத்த வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக சாம்பியனாக உள்ளது. கிறிஸ் கெயில், மர்லன் சாமுவேல்ஸ், சுனில் நரைன், சாமுவேல் பத்ரி போன்ற டி20 போட்டிகளில் சிறந்த வீரர்கள் பலரை அந்த அணி கொண் டிருக்கிறது. குறிப்பாக டி20 போட்டியில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் கிறிஸ் கெயில் 15 மாத இடை வெளிக்குப் பிறகு அந்த அணிக்காக ஆடவுள்ளார். சிக்சர்களை அனாயாசமாக பறக்க விடக்கூடிய ஆற்றல் வாய்ந்த அவரது சவாலை இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் டி20 போட்டியில் அந்த அணியின் எவின் லீவிஸ் சமீப காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்ததை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. எனவே இன்றையப் போட்டியில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

அணி விவரம்

இந்தியா :

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, தோனி, யுவ ராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி.

மேற்கிந்தியத் தீவுகள்:

கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ரான்ஸ்போர்டு பீட்டன், கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, சுனில் நரைன், பொல்லார்ட், ரோவ்மன் பொவல், மர்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், வால்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x