Published : 05 Dec 2015 10:31 AM
Last Updated : 05 Dec 2015 10:31 AM

இந்தியா- தென் ஆப்பிரிக்கா தொடர்: சொந்த மண்ணில் முதல் சதம்- ரஹானே சாதனை

# ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 4வது முறையாகும். இந்த தொடரில் அவர் 21 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

# ரஹானே-அஸ்வின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் இதுதான் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.

# சொந்த மண்ணில் ரஹானே சதம் அடிப்பது இதுவே முதன்முறை. அவர் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். இவை அனைத்தும் 5 அணிகளுக்கு (தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை) எதிரானது.

# 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதன்முறையாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது.

# ஒரு சீசனில் ஒரு விக்கெட் மட்டும் சரிந்ததும் நேற்று தான். அதுவும் 95 ரன்கள் அடிக்கப்பட்டது.

# பாலோ-ஆனை தவிர்க்க இன்னும் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணி கடைசி 9 விக்கெட்டுகளை 83 ரன்களுக்கு இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x