Published : 14 Aug 2015 10:14 AM
Last Updated : 14 Aug 2015 10:14 AM

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் சாதனைத் துளிகள்...

3

நேற்று சதமடித்ததன் மூலம் அந்நிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷிகர் தவன். முன்னதாக கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்திருந்தார். சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட் ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்த மற்ற இந்தியர்கள் ஆவர்.

227

கோலி-தவன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இலங்கைக்கு எதிராக 3-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி என்ற பெருமையை தட்டிச் சென்றது.

8

இந்திய அணியின் 8 பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யூ அல்லது போல்டு முறையில் ஆட்டமிழந்தனர். இதுபோன்று இந்தியர்கள் ஆட்டமிழப்பது 5-வது முறையாகும்.

1

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணா ரத்னே, ஜே.கே.சில்வா ஆகியோர் முறையே அஸ்வின், மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் ஓர் அணியின் இரு தொடக்க வீரர்களும் ரன் ஏதுமின்றி சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும்.

4

கேப்டனாக பதவி வகித்த முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ளார் கோலி. இந்த சாதனையை செய்த 3-வது வீரர் கோலி ஆவார். இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆகியோர் மற்ற இருவர். இதில் குக், கேப்டனாக பதவி வகித்த முதல் 5 போட்டிகளில் சதமடித்துள்ளார்.

2

இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் குவித்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை விருத்திமான் சாஹா (60) பெற்றுள்ளார். முதல் விக்கெட் கீப்பர் தோனி ஆவார். 2010-ல் கொழும்பில் நடைபெற்ற போட்டியில் தோனி 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x