Published : 14 Oct 2018 09:22 AM
Last Updated : 14 Oct 2018 09:22 AM

குறிப்புகள் பலவிதம்: வாடாத முருங்கைக்காய்!

# முருங்கைக் காயை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால் உலர்ந்துவிடும். அதற்குப் பதில் துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நிறம்மாறாமல் அப்படியே இருக்கும். முழுதாகத்தான் வைக்க வேண்டும் என நினைத்தால் செய்தித்தாளில் சுற்றி வைக்கலாம்.

# சப்பாத்தி மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஃப்ரீஸரில் அரை மணி நேரம் வைத்து எடுத்த பிறகு உருட்டினால் இறுகிவிடும்.

# எண்ணெய்யில் வறுத்த வெந்தயத்தைச் சாம்பாரில் சேர்த்தால் மணம் கூடும்.

# வறுவல் அல்லது கூட்டில் உப்போ காரமோ அதிகமாகிவிட்டால்  ரஸ்க்கைத் தூள் செய்து கலந்தால் சரியாகிவிடும்.

# வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு வதக்கினால் மொறுமொறுவென்று இருக்கும்.

# பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவுடன் சிறிது நெய், உப்பு, தயிர் கலந்து பொரிக்கலாம்.

# வாழைப்பூவைத் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, குடல் புண், மூலம் போன்றவை மட்டுப்படும். 

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x