Last Updated : 18 Aug, 2018 06:09 PM

 

Published : 18 Aug 2018 06:09 PM
Last Updated : 18 Aug 2018 06:09 PM

படிப்போம் பகிர்வோம்: நிறத்துக்கும் குணமுண்டு

சென்னை தரமணியிலுள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் மூன்றாமாண்டு சட்டம் படிக்கும் மாணவி சௌஜனி ராஜன். இவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பை ‘Pink is not our colour’ என்ற தலைப்பில் புத்தகமாக நோஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பள்ளிச் சிறுமியின் பார்வையில் வாழ்க்கையின் பிரிவுகளையும் வேதனை களையும் ‘Colourless Beauty’ எனும் தனது முதல் தொகுப்பில் கவிதைகளாக் கியிருந்தார் சௌஜனி.  ‘பிங்க் இஸ் நாட் அவர் கலர்’ நூலில் பெண்ணியம் குறித்த ஆரோக்கியமான விஷயங்களைக் கவிதை களாக்கியிருக்கிறார்.

“பெண்ணியத்தைப் பலரும் பல விதமாக அணுகுகின்றனர். பலர் ஆணுக்கு எதிரானதாகப் பெண்ணியத்தைச் சித்தரிக்கின்றனர். பெண் என்றும் ஆண் என்றும் இருவிதமாகப் பார்ப்பதே பெண்ணி யத்துக்கு எதிரானது. இன்றைய தேவை பாலினச் சமத்துவம். அதைத்தான் என் கவிதைகளில் நான் வலியுறுத்தியிருக்கிறேன்” என்றார் சௌஜனி.

பூசப்படும் சாயம்

தனது கவிதைகளில் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். காரணம் கேட்டால், “நிறத்தை வைத்து ஒருவரைப் பற்றி முன் முடிவு எடுக்கும் போக்கு இன்று அதிகம். குழந்தையிலிருந்தே பெண் எந்தப் பொருளையும் பிங்க் நிறத்தில் வாங்குவதிலும் ஆண் குழந்தைகளுக்கு நீல நிறத்தில் வாங்கு வதில் இருந்துமே நிறங் களைத் திணிக்கத் தொடங்கி விடுகின்றனர்” என்று அழுத்தமான கருத்துகளை முன்வைத்துப் பேசுகிறார் சௌஜனி. 

பிங்க் நிறத்துக்கு மென்மை, வலுவின்மை என்பதான அர்த்தங்கள் அனைத்தும் வெறும் கற்பிதங்களே என்பதை இவரது கவிதைகள் உணர்வுபூர்வமாக உணர்த்துகின்றன. பெண்களுக்கு பிங்க் சாயம் பூசப்பட்டு அவர்களுடைய உண்மையான குணாதி சயங்களான உறுதியும் வலிமையும் மறைக்கப்படுகின்றன என்பதே இவரின் குற்றச்சாட்டு. பூசப்பட்ட சாயத்திலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும் என்பதே இவரது கவிதைகளின் எதிர்பார்ப்பு.

தனது படைப்புகளை Soujani Rajan என்ற முகநூல் பக்கம் மூலமாகவும் @_for_the_love_of_writing என்ற இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பகிர்ந்துவருகிறார் இவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x