Published : 18 Aug 2018 06:09 PM
Last Updated : 18 Aug 2018 06:09 PM

குறிப்புகள் பலவிதம்: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை

> நெல்லி வற்றல் பொடியைத் தினமும் மூன்று வேளை  ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து குடித்துவந்தால் தோல் நோய்களும் கண் நோய், சர்க்கரை நோய் போன்றவையும் குறைய வாய்ப்புண்டு.

> வெந்தயக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் நாள்பட்ட சொறி, சிரங்கு, பார்வைக் கோளாறு ஆகியவை நீங்கும்.

> மஞ்சள் தூளில் சிறிது உப்பு சேர்த்து  வெது வெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்தால் வாய்ப்புண்ணும் தொண்டைப் புண்ணும் குணமாகும்.

> பப்பாளிப் பழத்தைக் குழைத்து  கண்ணில் படாமல் முகத்தில் பூசி உலற வைத்துப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும்.

> சீமை அகத்தி இலையைக் கசக்கி, தேமல், கடி போன்றவை உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ளுங்கள். பிறகு கடலை மாவு தேய்த்து வெந்நீரில் குளித்தால் தேமல் மறையும்.

> மருதாணி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கின் மீது பத்துப்போட்டு வந்தால் சில நாட்களில் குணமாகும்.

> பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து உண்ண கபக்கட்டு,  காசம், இருமல் போன்ற சீதள நோய்கள் தீரும்.

> சித்தரத்தைப் பொடியைச் சிறிது பனங்கற்கண்டு தூளுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவர சளி, ஈளை, இருமல், தொண்டைப்புண், நீர்க்கோவை, வாயு போன்றவை மட்டுப்படும்.

> செம்பருத்தி இலையை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடம்பில் உள்ள சூடு தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

> அரிசி களைந்த நீரில் அகத்திக் கீரையை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் பித்தம் தொடர்பான தலைச்சுற்றல் குணமாகும்.

- ச. உமாதேவி, திருவண்ணாமலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x