Last Updated : 22 Apr, 2018 10:22 AM

 

Published : 22 Apr 2018 10:22 AM
Last Updated : 22 Apr 2018 10:22 AM

போகிற போக்கில்: பசுமையின் ஆட்சி

 

சுமை நிறைந்த ஓவியங்களால் கவனம் ஈர்க்கிறார் ரேஷ்மி கோபிநாத். சென்னை போரூரைச் சேர்ந்த இவரது சிறுவயது கனவு, திருமணத்துக்குப் பிறகே நனவானது. “திருமணம் முடிந்து கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்தோம். என் ஓவிய ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட என் கணவர் கோபிநாத், அங்கிருந்த ஓவியப் பள்ளி ஒன்றில் என்னைச் சேர்த்துவிட்டார். அங்குதான் என் வாழ்க்கையில் வண்ணங்கள் சேர்ந்தன” என்று சொல்லும் ரேஷ்மி, ஆயில் பெயிண்டிங், அக்ரலிக், ஒன் ஸ்ட்ரோக் பெயின்டிங் எனப் பல ஓவிய முறைகளைக் கற்றுத் தேர்ந்தார். அமெரிக்காவில் சில ஓவிய கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறார். தற்போது பிரபலமடைந்துவரும் ஜென்டாங்கிள் ஓவியத்தை அதிகமாக வரைகிறார்.

மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுப்பது மட்டுமல்லாமல், சென்னை வீக் எண்டு ஆர்ட்டிஸ்ட் குழுவினருடன் இணைந்து இவர் செயல்பட்டுவருகிறார். “எனக்குப் பொதுவா இயற்கை சார்ந்த ஓவியங்களை வரைவதுதான் பிடிக்கும். இயற்கையில் இருக்கும் பசுமை, நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். இப்போ ஓவியத் துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் பெண்கள் அவற்றைப் பயன்படுத்திக்கணும். திறமையிருந்தா மட்டுமல்ல திறமையை வளர்த்துக்கவும் ஓவியம் உதவும்” என்கிறார் ரேஷ்மி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x