Published : 11 Feb 2018 11:27 AM
Last Updated : 11 Feb 2018 11:27 AM

குறிப்புகள் பலவிதம்: சுளுக்கைப் போக்கும் ஜாதிக்காய்

டைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டால் மாவு இறுகும்.

வெண்ணெயைக் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயம் போட்டால் நெய் மணமாக இருக்கும்.

சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் கிராம்பைப் போட்டுவைத்தால் எறும்பு வராது.

தாதுப் பொருட்கள் அதிகமுள்ள வெந்தயக் கீரையைப் பருப்புடன் கடைந்து சாப்பிடலாம்.

மஞ்சள் வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து மோர்க் குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

பட்டுத் துணிகளின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்க யூக்கலிப்டஸ் தைலம் சிறந்தது.

தொடர்ச்சியாக விக்கல் வந்தால் ஒரு டீஸ்பூன் தேனைச் சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும். இல்லையெனில் சிறிது சர்க்கரையைச் சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் கொட்டையைக் காயவைத்துப் பொடித்து, நாள்தோறும் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜாதிக்காயை உடைத்துப் பால் சேர்த்து அரைத்து, கொஞ்சம் கொதிக்கவைத்து இளம் சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட வேண்டும். பிறகு வெந்நீர் விட்டுக் கழுவி உருவிவிட வேண்டும். இப்படிச் செய்தால் மூன்று நாட்களில் சுளுக்கு நீங்கிவிடும்.

போளி தட்டும்போது வாழையிலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

காய்கறி வெட்டும் கத்தியில் எண்ணெய் தடவி, பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைத்தால் துரு பிடிக்காது.

மழைக் காலத்தில் உப்பு நீர்விட்டுப்போகும். அதில் மூன்று பச்சை மிளகாய்களைப் போட்டுவைத்தால் ஈரம் கசியாது.

- அ.பாவனி, வயலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x