Last Updated : 01 Jan, 2017 01:18 PM

 

Published : 01 Jan 2017 01:18 PM
Last Updated : 01 Jan 2017 01:18 PM

சேனல் சிப்ஸ்: பயிற்சியாளர்

சன் தொலைக்காட்சியில் ‘சூரிய வணக்கம்’, ‘சின்னச் சின்ன ஞாபகங்கள்’, சன் நியூஸ் தொலைக்காட்சியில் ‘பாக்ஸ் ஆபீஸ் மூவி ரிவ்யூ’ என்று அசத்தி வரும் தொகுப்பாளர் டோஷிலா, ஆர்.ஜே, வி.ஜே படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியையும் தொடர்கிறார்.

“சன் தொலைக்காட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி சூரியன் எஃப்.எம்ல ஆர்.ஜேவாகவும், நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்தேன். அங்கே இருந்து புதிய தலைமுறைக்குப் போய் நேரடி டாக்டர் ஷோ நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினேன். அது 850 அத்தியாங்களுக்கும் மேல் ஒளிபரப்பானது. இப்போ திரும்பவும் சன் தொலைக்காட்சிக்கு வந்தாச்சு. சூரிய வணக்கம், மூவி ரிவ்யூன்னு ஜாலியா நாட்கள் நகருது. ஆரம்பத்துல இருந்தே எழுத்துல எனக்கு ஆர்வம் உண்டு. நிறைய ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிட் எழுதிக் கொடுத்துட்டு இருக்கேன். அந்த ஆர்வத்தில்தான் இப்போ ஆர்.ஜே., வி.ஜே. பயிற்சியிலும் இறங்கியிருக்கேன்!’’ என்கிறார் டோஷிலா.

மகிழ்ச்சி

தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வலம் வரும் மைதிலி, ”வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் ‘ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி’ கிடைத்தால் புது வருஷத்துல நான் வாசிக்கிற முதல் மகிழ்ச்சியான செய்தி அதுவாகத்தான் இருக்கும்!’’ என்கிறார்.

“இந்த வருஷம் என்னோட தலைப் பொங்கல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்குற கணவர் தினேஷை அழைத்துக்கொண்டு, கும்பகோணம் பக்கத்துல இருக்குற எங்க ஊருக்குப் போய் பொங்கலைக் கொண்டாடப் போறேன். எத்தனைப் பண்டிகை வந்தாலும் பொங்கல் மாதிரி மகிழ்ச்சியான பண்டிகை எதுவும் இல்லை. இந்த மாதிரி நேரத்துல ஜல்லிக்கட்டு போட்டி இருந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும். செய்தி வாசிப்பு தவிர, இன்னும் பல நிகழ்ச்சிகள் வழங்கணும்னு புத்தாண்டில் புதுத் திட்டங்கள் வைச்சிருக்கேன். பொங்கல் முடிந்ததும் அதை நோக்கிப் பயணிப்பதுதான் என் வேலை’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் மைதிலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x