Published : 13 Dec 2018 10:17 AM
Last Updated : 13 Dec 2018 10:17 AM

ஆன்மிக நூலகம்: அதிதிகள் யார்?

தெய்வம் எல்லாவற்றிலும் இருக்கிறது என்றபடியால் முதலில் எல்லாவற்றிலும் சம்புத்தி வேண்டும். எல்லா ஜந்துக்களையும் சமமாகவே பார்க்க வேண்டும். உயர்ந்த குலத்தாருக்கு அன்னமளிப்போம், மற்றவர்கட்கு வேண்டியதில்லை என வித்தியாச புத்தி இருக்கும்வரையில் கடவுளைப் பற்றிச் சரியாய் மனதில் ஸ்பூர்த்தி கிடைக்காது. ஆகையால் நானாசாகேபுக்கு தானங்களிலிருந்த விஷம புத்தியை பாபா முதலில் கண்டித்தார்.

நானாசாகேபு ஆசார சீலர். சந்தியாவந்தனம், ஜபம், பாராயணம், வைசுவதேவஹோமம், பஞ்சயக்ஞம் முதலியவற்றைப் பிரதி தினமும் சிரத்தையுடன் செய்வார். அப்படிச் செய்வதில் அவருக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வைசுவதேவஹோமம் செய்த உடனே அன்னத்தைப் புசிப்பதற்கு முன் வெளியே வந்தார். இவர் வரும் சமயம் அதிதிகள் யாரையும் காணவில்லை. ஏது! வியர்த்தமான காரியத்தைச் செய்ய, வேதம் நம்மைக் கட்டளையிட்டிருக்கிறதோ என்று இவர் சந்தேகித்தார்.

இச்சந்தேகம் தெளிய பாபாவைக் கேட்க வேண்டுமென மனத்தில் எண்ணி பாபாவிடம் போனார். இவர் வாயைத் திறக்குமுன்னமே, இவர் உள்ளத்திலுள்ளதை உள்ளபடியறிந்த பாபா இவரை ஏசினார்.

பாபா : அடே, வேதத்தில் பிசகில்லை. வியர்த்தமான காரியத்தைச் செய்யும்படி வேதம் சொல்லவில்லை. இருக்கும் பிசகு உன்னுடைய வியாக்கியானத்திலிருக்கிறது. ஏன் நீ ‘அதிதி’ என்னும் வார்த்தைக்கு இரண்டு கால், இரண்டு கையுள்ள மனிதன், அதிலும் பிராமணன் என்று அர்த்தம் செய்கிறார்? நீ வெளியே வந்து பார்க்கும்பொழுதும் அதற்கு முன்னும் பின்னும், யதேஷ்டமாய் அதிதிகள் பசியுடன் வந்து பார்த்துப் போகிறார்கள்.

நீ மட்டும் அவர்களைக் கவனிப்பதில்லை. அவர்கள் யார் தெரியுமா? தெருவில் போகும் பசுக்கள், வைசுவதேமானவுடன் அன்னத்தை வெளியே எடுத்துவந்து வீட்டருகே வைத்துவிட்டுப் போ. அவர்களெல்லாம் தங்களுக்கேற்ற சமயம் வந்து சாப்பிட்டுப் போவார்கள். கடவுளுக்குப் பிரீதியாகும்.

ஆகையால் எல்லா உயிர்களிலும் கோத்துக் கொண்டு பிரகாசிக்கும் கடவுளையே பிரீதி செய்ய, இந்த சமதிருஷ்டியை இவ்வாறு நானாவுக்குப் பாபா போதித்தனர். பிறகு அவ்வாறே நானா செய்துவந்தார்.

ஒவ்வொரு மானிட உருவத்திலுங்கூட அழகையோ அழகின்மையையோ பார்க்காதே. அதனால் அதைக் கோத்துக் கொண்டிருக்கும் கடவுளைப் பார்த்து, இது மனுஷன், இது ஸ்திரீ என்றெண்ணாமல் இது வியக்தி, வியக்திக்குள்ளிருக்கும் ஆதாரமாகிய கடவுளே குணங்களாலும் உருவத்தாலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

ஷீரடி ஸாயி பாபா

ஸ்ரீ நரஸிம்ம சுவாமிஜி

வ. உ. சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி,

அவ்வை சண்முகம் சாலை,, இராயப்பேட்டை,

சென்னை – 14, தொடர்புக்கு: 98404 44841

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x