Published : 12 Dec 2018 05:58 PM
Last Updated : 12 Dec 2018 05:58 PM

வார ராசிபலன் டிசம்பர் 13 முதல் 19 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புத்திசாதுரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் கட்டாய இடமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்.

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் சொல்வதால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு, சுபச்செலவு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரச் சிறந்த காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் லாபம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள், உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கும். பயணங்கள் வாய்க்கும். கூட்டுத்தொழில், வியாபாரம் செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும்.குடும்பத்தில் பிறரால் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும்.  பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு,உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் பொறுப்பான செயல்களுக்காகத் தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: முருகனை வணங்கி வர பிரச்சினைகள் தீரும்.பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்தபடி காரியம் நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். பிள்ளைகள் சொல்படி நடப்பது மனத்துக்கு மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். உற்சாகத்துடன் கட்சி வேலைகளில் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு, போட்டிகள் குறையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சினை தீரும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். எதைக் கண்டும் அஞ்சாமல் பணியாற்றுவீர்கள்.வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்குவதில் கவனம் செல்லும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடைவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.திறமையான பேச்சினால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்வதைச் செய்வதால் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு புதிதாகச் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும்.மாணவர்களுக்கு, ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியங்களைச் செய்வதற்கான அனுபவ அறிவும், செயல்திறனும் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். தொழில்,வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் அடுத்தவரை நம்பிப் பொறுப்புக்களை ஒப்படைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும்.பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு, அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு, பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: வினாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும்.தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களால் பெண்களுக்கு தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, அபரிமிதமாக வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x