Published : 06 Dec 2018 10:31 AM
Last Updated : 06 Dec 2018 10:31 AM

வார ராசிபலன் டிசம்பர் 6 முதல் 12 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயல்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பெண்களுக்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீர ஆலோசித்தே ஈடுபடவும். மாணவர்களுக்கு, படிப்பு பற்றிய கவலை நீங்கும். ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனுக்குப் பால் பாயசம் நிவேதனம் செய்தால் இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவினால் வில்லங்கம் ஏற்படலாம். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவருடன் பேசும்போது கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும்.

உறவினர்கள், நண்பர்களிடம் மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்களுக்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள் சிறிய வேலையையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

பரிகாரம்: பவுர்ணமியன்று பூஜை செய்து அம்மனை வணங்க எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடுவது நன்மை தரும். தனாதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச்செல்வது நன்மை தரும்.

நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு, எடுத்த காரியங்களில் நெருக்கடி உண்டாகும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர், சக மாணவர்களிடம் பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க குடும்பம் சுபிட்சமடையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் கவலைகள் நீங்கும். திட்டமிட்டுச் செயலாற்றுவதால் பின்னடைவு அகலும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்திதரும். உத்தியோகத்தில் வேலைப்பளுவை உணர்வீர்கள். மேலதிகாரிகள் வேலைகளில் குறை காணலாம். விழிப்புடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம்.

கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகளுக்குத் தடைகள் அகலும். பெண்களுக்கு, காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சினைகள் சுமுகமாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் குறையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, சங்கடங்கள் குறையத் தொடங்கும். மேலிடத்தின் ஆதரவுடன் மனதுக்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, புகழும் கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு, மற்றவர் மேல் இரக்கம் உண்டாகும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்

எண்கள்: 5, 6

பரிகாரம்: அய்யப்பனுக்கு அபிஷேகத்துக்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்க சகல தோஷங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x