Last Updated : 11 Oct, 2018 10:00 AM

 

Published : 11 Oct 2018 10:00 AM
Last Updated : 11 Oct 2018 10:00 AM

அலை என்பதும் கடல்தான்

யோகத்தின் தந்தை என அறியப்படும் பரமஹம்ச யோகானந்தர் அவதரித்து 125 ஆண்டுகள் ஆகின்றன. இதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பரமஹம்சரால் உருவாக்கப்பட்ட சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், தியான உத்திகள் வாயிலாக மனிதனின் மூவகை துன்பங்களான உடல் நோய், மனக்கவலைகள், ஆன்மிக அறியாமை ஆகியவற்றில் இருந்து விடுவித்தல் ஆகியவை பிரசாரங்களாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இக்கலையை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தன்னுடைய பேரான்மாவாகக் கருதி, சேவை செய்யும் அமைப்புதான் யோகதா சத்சங்க சொசைட்டி. பரமஹம்சரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு மிகப்பெரும் ஒரு ஆன்மிகச் சொற்பொழிவை நடத்தி முடித்திருக்கிறது. இதில் மனித உணர்வுநிலையை, மிக உயர்ந்த விழிப்பு நிலைகளுக்கு ஈர்த்துப் படிப்படியாக அக விழிப்பினை கொண்டுவரும் உத்தியான கிரியா யோகம் குறித்து விளக்கப்பட்டது.

இதில் சுவாமி சுத்தானந்தா பேசும்போது, “அலை ஒன்று நாம் கரையில் மோதி உயிரிழக்கப்போகிறோம் என்று நினைத்துக் கவலைப்பட்டதாம். அதனிடம் சகோதர அலை ஒன்று, “நீ கரையை மோதிவிட்டு திரும்பவும் கடலுக்கு வந்துவிடுவாய். ஏனெனில் நீ அலை அல்ல, கடல். அதை முதலில் உணர்” என்றதாம். அதுபோல நாம் நம்மை உணர வேண்டும். அதற்கு மனது அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சக்தியை சிவத்தை நாம் பிரித்து உணரமுடியும். அப்படியான ஒரு மன அமைதியை கிரியா யோகா தருகிறது” என்றார்.

இந்தச் சொற்பொழிவில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபி நிறுவன இயக்குநர் சஞ்சய் தியாகி பங்கேற்றார். சுவாமி பவித்ரானந்தா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x