Published : 20 Sep 2018 10:32 AM
Last Updated : 20 Sep 2018 10:32 AM

வார ராசிபலன் செப்டம்பர் 20 முதல் 26-ஆம் தேதி வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும்.உடன் பணிபுரிவோரிடம் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வத்தை வழிபட்டு காரியங்களைத் தொடங்க வேண்டும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் முக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். நற்பெயர், கீர்த்தி ஏற்படும். பெண்களுக்கு, உங்கள் சிந்தனையும் செயலும் முரண்படாமல் பார்த்துக் கொள்ளவும். கலைத் துறையினருக்கு  கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் வந்தடையும். மாணவர்களுக்கு, ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதுரியத்துடன் காரியங்களைச் செய்து மற்றவர் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்தக் காரியத்திலும் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு லாபம் உண்டாகும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டி வரலாம். சுக்கிர பகவான் சஞ்சாரத்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாள் பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம்.

சிலர் தேவையான உதவிகளை கேட்டுப் பெற வேண்டியிருக்கும். பெண்கள் உற்சாகமாக செயல்பட வாய்ப்புள்ளது. கலைத் துறையினருக்கு சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் வாய்ப்புகள் பெற்று முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் கடந்த காலத் தவறை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மாணவர்கள் பொறுமையுடனும்,நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேற்படிப்பைத் தொடர முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகன விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திறமையாகச் செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். சில சட்டச் சிக்கல்கள் வந்து போகும். உறவினர் வருகையால் கலகம் உண்டாகும். குருபகவானின் பார்வையால்  பிரச்சினைகள் அகலும்.நன்மைகள் ஏராளமாய் நடைபெறும். வராத பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய உத்திகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத் துறையினருக்கு,  புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள், அரசு சம்பந்தமான பிரச்சினைகளை கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு, படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்கி வயோதிகர்களுக்கு உதவ வேண்டும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டாகலாம். தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம். தொழிலில் பணவரவு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பாக உண்டு.

மேலதிகாரிகளிடம் கசப்பு நீங்கி நல்லுறவு ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு, தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.கலைத் துறையினருக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய காலகட்டம் இது.அரசியல்வாதிகளுக்கு, வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. நம்பிக்கைக்குரியவர்கள் மீது சந்தேகம் வரலாம். மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். தொழில் படிப்புகளில் நல்ல எதிர்காலம் உண்டு.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமையன்று தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும்

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவாதங்கள், விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். பணவரவு கூடும்.சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உற்சாகம் உண்டாகும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் தவறு செய்பவர்களுக்கு அதை சுட்டிக்காட்டு சரி செய்வீர்கள். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

தொழிலில் யோகமான காலமாக இது. நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு, பணப் பிரச்சினைகள் தீரும். கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய காலகட்டமாகும். அரசியல்வாதிகள், பிறர் பேச்சுகளை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மாணவர்கள், தங்கள் நிலை உயர அரும்பாடுபட்டு முயற்சி செய்வீர்கள். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமை வினாயகரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பங்காளிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தொழிலைப் பொறுத்தவரையில் ஆதாயம் அதிகமாக கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டிவரும்.

வெளியூர்ப் பயணங்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரும்.அதிகாரிகளுக்கு, நல்ல சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரலாம். கலைத் துறையினருக்கு, அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மூத்த தலைவரால் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் ஒத்துழைப்புக்கு சிரத்தை வேண்டும். மாணவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உற்சாகமான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினை தீரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x