Last Updated : 05 Feb, 2018 09:47 AM

 

Published : 05 Feb 2018 09:47 AM
Last Updated : 05 Feb 2018 09:47 AM

ஜோதிடம் அறிவோம்! 11: இதுதான்... இப்படித்தான்! தோஷ பரிகாரம் பொய்யா?

ராகு கேது தோஷ விபரங்களைப் பார்த்தோம். இப்போது தோஷம் வேலை செய்யுமா, செய்யாதா?

என்பதையெல்லாம் பார்ப்போம்.

ராகுவும் கேதுவும் உலக இயக்கம் என்னும் பிறப்பு மற்றும் பிறப்பின் பயனால், பிறப்பற்ற மோட்சம் எனும் உயர்நிலை என இவற்றைத் தருவதே சர்ப்பங்களின் வேலை.

அதனால்தான் யோக முத்திரைகளிலும் மருத்துவ முத்திரைகளிலும், சர்ப்பங்கள் இடம் பெறுகின்றன.

வாசி யோகத்தில் அதாவது சுவாசத்தில்... மூச்சை உள் இழுத்தல் ராகு, அதாவது வாழவேண்டும் என்ற ஆசையை உண்டாக்குவது.

மூச்சுக் காற்றை வெளியிடுவது கேது, அதாவது வாழும் ஆசையை போதும் என வலியுறுத்துவது கேது. ஆக, மூச்சை உள்ளிழுப்பது ராகு. மூச்சை வெளியே விடுவது கேது.

இந்த இரண்டையும் சமப் படுத்துவது யோகக் கலை.

குண்டலினி தத்துவமும் இதுதான். இப்படித்தான் வரையறுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே வாழ்வதற்கான ஆதாரமான ராகு கேதுக்கள் எப்படி தோஷத்தைத் தருவார்கள்,

நாம் ஏற்கெனவே பார்த்தபடி சர்ப்ப தோஷ பரிகாரம் என்பது சமீபகாலத்தில் உருவானது.

எனவே திருமணப் பொருத்தத்தில் தோஷங்களைப் பார்க்கவே வேண்டாம் என்பதை உறுதியாகவே சொல்கிறேன்.

5 ம் இட தோஷ விபரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்

5ல் ராகு தோஷமா?... அளவற்ற ஆண் குழந்தைகள் பிறக்கும்.

5ல் கேது... குழந்தை உண்டு. ஆனால் ஆரோக்கியப் பாதிப்பு உள்ள குழந்தை அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெற்றோரைப் பிரிந்து தனிமையை ஏற்படுத்தும் குழந்தை என்கிற நிலை உண்டாகும்.

என் அனுபவத்தில் இங்கே ஒன்றைச் சொல்கிறேன். சுமார் 30 வருடங்களுக்கு முன் காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் போது அங்கே ராகு கேது பரிகாரம் என்று பெரிய அளவில் நடந்து பார்த்ததேயில்லை.

தற்போது பெரிய அளவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுமார் 100 முதல் 200 பேர் அமர்ந்து பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் கூறுகிறேன். எந்த பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகாது. தோஷம் தோஷம்தான்..! அதை அனுபவித்தே தீரவேண்டும்

அப்படியெனில்.. தோஷம் பாதிக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில்... ஆமாம், பாதிக்கும். அதை அனுபவித்துதான் தீரவேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம்,

அதெல்லாம் நாம் நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு என்றே கடந்துவிடுகிறோம்.

உண்மையில் அனைத்தும் கிரகங்களின் ஆளுமையே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சந்திக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

யோசித்து பாருங்கள்... பாக்கெட் நிறைய பணம் இருந்தும், பசியில் இருந்திருப்பீர்கள்,

வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றாலும் உண்ண முடியாத நிலையும் வந்திருக்கும்.

இவை அனைத்தும் கிரகங்களின் வேலைகளே!

எனவே தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். செழிப்பாக்கும்!

ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம்தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே... எல்லாம் நன்மைக்கே என்று கூறி, தோஷங்களுக்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

-தெளிவோம்

இதன் அடுத்த அத்தியாயம் 7.2.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x