Published : 06 Jan 2018 10:59 AM
Last Updated : 06 Jan 2018 10:59 AM

மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!

திருப்பள்ளியெழுச்சி

கூவின பூங்குயில்; கூவின கோழி

குருகுகள் இயம்பின: இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து

ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்!

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய்! எமக்கெளியாய்!

எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!

அதாவது, குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன. சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி மேலோங்குகிறது.

தேவனே! விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள்!

திருப்பெருந்துறை வீற்றிருக்கும் சிவபெருமானே! யாராலும் அறிவதற்கு அரியவனே. அடியவராகிய எங்களுக்கு எளியவனே. எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

(குருகு - பறவை, ஓவுதல் - மறைதல், தாரகை - நட்சத்திரம், ஒருப்படுதல் - முன்னேறுதல், மேலோங்குதல்)

இந்தப் பாடலை சிவபெருமானை நினைந்து, மனமுருகிப் பாடுங்கள். வில்வம் சார்த்திப் பாடுங்கள். வேண்டியன எல்லாம் தந்தருள்வார் ஈசன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x