திருத்தலம் அறிமுகம் - திசைமுகன்சேரி: அனைவருக்குமான தரிசனம்

Published : 14 Jan 2016 11:35 IST
Updated : 14 Jan 2016 11:35 IST

பிரம்மதேவருக்கு நான்கு திரு முகங்கள்.. அவை ருக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளையும் நோக்கி சதா ஸ்மரணம் செய்து கொண்டிருப்பதற்காகவே நான்கு முகங்களை ஏற்றதால், பிரம்மனுக்கு திசைமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சதா வேதங்களைச் சொல்லிக்கொண்டிருப்பதால், அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் சக்தியைப் பெற்றார் பிரம்மதேவன்.

ஒரு சமயம், பிரம்ம தேவருக்கு வேதங்களின் பொருள் பற்றி ஐயம் ஏற்பட்டது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, தனது படைப்புத் தொழிலை நிறுத்திவைத்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து மிகக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார். பிரம்மா தன் தவத்தினை மேற்கொண்ட பரம பவித்திரமான இடமே திசைமுகன்சேரி என்கிற புண்ணிய பூமியாகும். பிரம்ம தேவரின் தவத்தினால் திருவுள்ளம் உகந்த ஸ்ரீமன் நாராயணன், பரம பதம் என்னும் தனது திவ்ய உலகில் எழுந்தருளியுள்ளபடி பிரம்மனுக்குக் காட்சியளித்து, வேத ரகசியங்களை உபதேசித்தருளினார். பிரம்ம தேவரின் வேண்டுகோளின்படி, அந்த திவ்ய தரிசனத்தை எக்காலத்திலும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் திசைமுகன்சேரியில் கோயில் கொண்டார்.

இந்தத் திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலின் கர்ப்பக்கிரக பின்புற மதில் சுவரில் 1881-ம் ஆண்டில், 10 பேர் சேர்ந்து இக்கோவிலைத் திருப்பணி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

மகா மண்டபத்தின் வலது புறம் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் பத்மாசனத்தில் தனது திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்திய எழில் கோலத்துடன் அமர்ந்து சேவை தரும் அழகான தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இடது புறம், ஆஸ்தான பெருமாளான ஸ்ரீராமபிரான், சீதாதேவியுடனும், இலக்குவன் மற்றும் ஆஞ்சநேயருடனும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மற்றும் விஸ்வக்க்ஷேனர், உடையவர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் மூல விக்ரகங்களாக எழுந்தருளி யுள்ளனர். உற்சவ மூர்த்திகள் - ஸ்ரீ வைகுந்தநாதர், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி சமேதராக நின்ற திருக்கோலத்திலும், மற்றும் கனகவல்லித் தாயார், சீதாதேவி சமேத ஸ்ரீராம, லக்ஷ்மண, ஆஞ்சநேய விக்ரகங்களும், ஸ்ரீசுதர்ஸன-நரசிம்மர், ஸ்ரீ கோபால கிருஷ்ணன், ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் விக்ரகங்களும் இத்திருக்கோயிலில் உள்ளன.

பகவானின் பேரழகு

ஸ்ரீ பரமபதநாதன், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, ஆதிசேஷன் குடைபிடிக்க, சிம்மாசனத்தில் சங்கு சக்கரதாரியாகத் திருமாமணி மகுடம் தாங்கி, புன்னகை தவழ, தனது வலது திருவடியை மடித்தும், இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும் கம்பீரமாக, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

பரமனின் இடது கரம் தரையில் ஊன்றியும், இடது திருவடியின் பின்புறம் சற்றே எழும்பியும், இடது காலின் கட்டை விரல் சற்றே பூமியை அழுத்தியும் உள்ள திருக்கோலம், தன்னை நினைக்கும் பக்தனின் இடத்திற்கு, தானே நேரில் சென்று அபயமளிப்பதாக உள்ளது. மடித்த வலது திருவடியின் மீது தன் நீட்டிய வலது கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காண்பித்திருப்பது, தன்னை உளமார நினைத்துத் தன் திருவடியைச் சரணடைபவர்களுக்கு நான் ஊன்றுகோலாகத் திகழ்வேன் என்பதைக் காட்டுகிறது.

பகவானின் வலது புறம் ஸ்ரீதேவித் தாயார் தனது வலது திருவடியைத் தொங்கவிட்டு, இடது திருவடியை மடித்துக்கொண்டும், இடது புறம், ஸ்ரீபூமிதேவித் தாயார் தனது வலது திருவடியை மடித்து, இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும் அமர்ந்து சேவை சாதிக்கின்றனர்.

கோயிலின் இருப்பிடம்

இத்திருக்கோவில், சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் (NH-4), வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில், காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில், சுமார் 7 கி. மீ. தொலைவில், திசைமுகன்சேரி என்னும் ஐயம்பேட்டைசேரி கிராமத்தில் உள்ளது.பிரம்மதேவருக்கு நான்கு திரு முகங்கள்.. அவை ருக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளையும் நோக்கி சதா ஸ்மரணம் செய்து கொண்டிருப்பதற்காகவே நான்கு முகங்களை ஏற்றதால், பிரம்மனுக்கு திசைமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சதா வேதங்களைச் சொல்லிக்கொண்டிருப்பதால், அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் சக்தியைப் பெற்றார் பிரம்மதேவன்.

ஒரு சமயம், பிரம்ம தேவருக்கு வேதங்களின் பொருள் பற்றி ஐயம் ஏற்பட்டது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, தனது படைப்புத் தொழிலை நிறுத்திவைத்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து மிகக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார். பிரம்மா தன் தவத்தினை மேற்கொண்ட பரம பவித்திரமான இடமே திசைமுகன்சேரி என்கிற புண்ணிய பூமியாகும். பிரம்ம தேவரின் தவத்தினால் திருவுள்ளம் உகந்த ஸ்ரீமன் நாராயணன், பரம பதம் என்னும் தனது திவ்ய உலகில் எழுந்தருளியுள்ளபடி பிரம்மனுக்குக் காட்சியளித்து, வேத ரகசியங்களை உபதேசித்தருளினார். பிரம்ம தேவரின் வேண்டுகோளின்படி, அந்த திவ்ய தரிசனத்தை எக்காலத்திலும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் திசைமுகன்சேரியில் கோயில் கொண்டார்.

இந்தத் திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலின் கர்ப்பக்கிரக பின்புற மதில் சுவரில் 1881-ம் ஆண்டில், 10 பேர் சேர்ந்து இக்கோவிலைத் திருப்பணி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

மகா மண்டபத்தின் வலது புறம் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் பத்மாசனத்தில் தனது திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்திய எழில் கோலத்துடன் அமர்ந்து சேவை தரும் அழகான தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இடது புறம், ஆஸ்தான பெருமாளான ஸ்ரீராமபிரான், சீதாதேவியுடனும், இலக்குவன் மற்றும் ஆஞ்சநேயருடனும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மற்றும் விஸ்வக்க்ஷேனர், உடையவர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் மூல விக்ரகங்களாக எழுந்தருளி யுள்ளனர். உற்சவ மூர்த்திகள் - ஸ்ரீ வைகுந்தநாதர், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி சமேதராக நின்ற திருக்கோலத்திலும், மற்றும் கனகவல்லித் தாயார், சீதாதேவி சமேத ஸ்ரீராம, லக்ஷ்மண, ஆஞ்சநேய விக்ரகங்களும், ஸ்ரீசுதர்ஸன-நரசிம்மர், ஸ்ரீ கோபால கிருஷ்ணன், ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் விக்ரகங்களும் இத்திருக்கோயிலில் உள்ளன.

பகவானின் பேரழகு

ஸ்ரீ பரமபதநாதன், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, ஆதிசேஷன் குடைபிடிக்க, சிம்மாசனத்தில் சங்கு சக்கரதாரியாகத் திருமாமணி மகுடம் தாங்கி, புன்னகை தவழ, தனது வலது திருவடியை மடித்தும், இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும் கம்பீரமாக, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

பரமனின் இடது கரம் தரையில் ஊன்றியும், இடது திருவடியின் பின்புறம் சற்றே எழும்பியும், இடது காலின் கட்டை விரல் சற்றே பூமியை அழுத்தியும் உள்ள திருக்கோலம், தன்னை நினைக்கும் பக்தனின் இடத்திற்கு, தானே நேரில் சென்று அபயமளிப்பதாக உள்ளது. மடித்த வலது திருவடியின் மீது தன் நீட்டிய வலது கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காண்பித்திருப்பது, தன்னை உளமார நினைத்துத் தன் திருவடியைச் சரணடைபவர்களுக்கு நான் ஊன்றுகோலாகத் திகழ்வேன் என்பதைக் காட்டுகிறது.

பகவானின் வலது புறம் ஸ்ரீதேவித் தாயார் தனது வலது திருவடியைத் தொங்கவிட்டு, இடது திருவடியை மடித்துக்கொண்டும், இடது புறம், ஸ்ரீபூமிதேவித் தாயார் தனது வலது திருவடியை மடித்து, இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும் அமர்ந்து சேவை சாதிக்கின்றனர்.

கோயிலின் இருப்பிடம்

இத்திருக்கோவில், சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் (NH-4), வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில், காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில், சுமார் 7 கி. மீ. தொலைவில், திசைமுகன்சேரி என்னும் ஐயம்பேட்டைசேரி கிராமத்தில் உள்ளது.Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor