Published : 07 Dec 2016 07:50 PM
Last Updated : 07 Dec 2016 07:50 PM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 2: ராகு கேது - அறிவியல் விளக்கம்

தாம் கடவுளாக வணங்கிய சூரியன் மற்றும் சந்திரனை மறைக்கும் விஷயத்தை பற்றி அறிய முயன்று, வானவியல் துறை உருவானது.

ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கும் போது அதை சுற்றி காந்தப் புலம் உருவாகும் என்று அறிவியல் (MAGNETIC SCIENCE) கூறுகிறது. இதை அறிவியல் உபகரணங்கள் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து வைத்திருந்தனர். இந்த காந்தப் புலம் மூலம் மனிதனின் வாழ்வியல் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தனர். எனவே இந்த காந்தப் புலத்தால் பூமியில் வாழும் மனிதர்கள் வாழ்வியல் பாதிக்கப்படுகிறது என்றும் அறிந்தனர். எனவே அந்த காந்தப் புலத்தை பற்றி ஆராய ஆரம்பித்தனர்.

ராகு - கேது

நமது பூமி சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதுபோல சந்திரன் பூமியை ஒரு வட்ட பாதையில் சுற்றிவருகிறது. இரு வட்ட பாதைகளும் பூமி சுற்றி வரும் வடபுலத்திலும் மற்றும் தென்புலத்திலும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும். இந்த வடபுல வெட்டு புள்ளி ' ராகு' எனவும், அதுபோல தென்புல வெட்டு புள்ளி ' கேது' எனவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அந்த வெட்டு புள்ளிக்கு இணையாக பூமி, சூரியன் சந்திரன் சம்பந்தப்படும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று அறிந்தனர். ராகு கேது இருவரும் தங்களுக்குள் பார்த்து கொள்ளமாட்டார்கள் என்பதை விளக்கவே, புராணக் கதைகளில் சொர்ணபானு அசுரன் தலைவேறு உடல்வேறாக வெட்டப்பட்டு, பாம்பின் உடல் மற்றும் தலை பொருத்தப்பட்டு ராகு மற்றும் கேது என பெயரிடப்பட்டு இருக்கிறனர். இருவரின் பண்புகளும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதே இதற்கு சாட்சி.

தென்புலத்தை விட வடபுலம் எனும் ராகுவே ஈர்ப்புத் தன்மை அதிகம் கொண்டது என்கிறது மின்காந்தவியல். ராகு என்பதன் சமஸ்கிருத அர்த்தம் வேகமாய் பரவுதல் அல்லது விழுங்குதல் என்பதே ஆகும். அதாவது அறிவியல் நோக்கில் பார்த்தால் ராகு என்பது வடபுலம் (அதிக காந்த தன்மை கொண்ட பகுதி) என்பதால் கிரகங்களை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே தான் ராகுவின் பண்புகளாக ஜோதிடத்தில் வேகமாய் பரவி, ஈர்த்து, இழுத்து, இணைத்து, அணைத்து, விழுங்கி, துப்புதல் அல்லது துண்டித்தல் என்பன கூறப்படுகிறது. இதை விளக்கும் குறியீடாக பாம்பின் தலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தென்புல புள்ளியை கேது என்கிறது ஜோதிடம். கேது என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் புகை என்பதாகும். புகை போல் சூழ்ந்து ஒருவரை இயங்கவிடாமல் செய்வது என்கிறது . எனவே கேது என்ற கிரகத்திற்கு பாம்பின் வால் என்று உருவகப்படுத்தி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

மேலை நாடுகளில் வடபுலத்தை ட்ராகன் தலை என்றும் தென்புலத்தை ட்ராகன் வால் என்றும் கூறுகின்றனர். நமது வேத ஜோதிடத்தில் ராகுவை கரும்பாம்பு என்றும் , கேதுவை செம்பாம்பு என்று கூறுகின்றனர். இதை விளக்கும் குறியீடாக பாம்பின் வால் நிர்ணயம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x