வேப்பம்பூ வற்றல் குழம்பு

Published : 29 Dec 2014 11:04 IST
Updated : 29 Dec 2014 11:04 IST

என்னென்ன தேவை?

வேப்பம்பூ வற்றல் - 2 டீஸ்பூன்

புளி எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் 15

பூண்டு 1

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

உப்பு தேவையான அளவு

அரைக்க

துவரம் பருப்பு, தனியா 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்

பெருங்காயம் சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை மட்டும் நிறம் மாறாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

வாணலியை சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பாதி கொதித்தவுடன் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். தனியாக வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் வேப்பம்பூ வற்றல் சேர்த்து பொரிந்ததும் கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

வேப்பம்பூ உடலுக்கு நல்லது. பித்தம் அகலும். குடற்பூச்சி வெளியேறும். சர்க்கரை வியாதிக்கும் ஏற்றது. வேப்பம் பூ பூக்கும் நேரங்களில் பூக்களைச் சேகரித்து தயிரில் ஊறவைத்து காயவைத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ராஜபுஷ்பா

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor