தித்திக்கும் திருக்கார்த்திகை: தெரளி கொழுக்கட்டை

Published : 11 Dec 2016 13:00 IST
Updated : 11 Dec 2016 13:00 IST

என்னென்ன தேவை?

வறுத்த சிவப்பரிசி மாவு - 1 கப்

வெல்லம் - 3/4 கப்

தேங்காய்த் துருவல் - 1 கப்

ஏலப்பொடி, சுக்குப் பொடி

- தலா 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தெரளி இலை (பிரிஞ்சி இலை) - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து , தேங்காயை வறுத்து தனியே வைக்கவும். பின் அதே கடாயில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாகு பதம் வந்ததும், அடுப்பை அணைக்கவும். சிறிது ஆறியதும் வடிகட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய், சுக்குப் பொடியுடன், வெல்லப் பாகையும் சிறிது சிறிதாகச் சேர்த்து , நன்கு பிடிக்கும் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். இதைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, தெரளி இலையில் வைத்து, பீடாக்கள் போல் சுருட்டிக்கொள்ளவும். இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தெரளி இலை வாசனையுடன் கமகமவென்ற கொழுக்கட்டை தயார்.

> வறுத்த மாவு என்பதால் ஒரு வாரம் வரை கெடாது.

> தெரளி இலை கிடைக்காதவர்கள் பாதாம் இலை அல்லது பலா இலையைப் பயன்படுத்தலாம்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor