கோவை இலை கூட்டு

Published : 15 Nov 2015 13:37 IST
Updated : 15 Nov 2015 13:37 IST

நம் வீட்டில் செய்தவை, உறவினர்களும் நண்பர்களும் அன்புடன் கொடுத்தவை என்று விதவிதமான பலகாரங்களைச் சுவைத்திருப்போம். அதை ஈடுசெய்வதற்காகச் சிலர் தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டிருப்பார்கள். இருந்தாலும் அடுத்துவரும் நாட்களில் ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிடுவதுதான் வயிற்றுக்கு நல்லது. நம் கையருகே இருக்கிற பொருட்களிலேயே நம் உடலை உரமாக்கும் அற்புதம் ஒளிந்திருக்கிறது என்று சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரோக்கியம் நிறைந்த நம் பாரம்பரிய உணவு வகைகளில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் அவர்.

என்னென்ன தேவை?

கோவை இலை 1 கப்

பாசிப் பருப்பு கால் கப்

சின்ன வெங்காயம் 10

காய்ந்த மிளகாய் - 1

பச்சை மிளகாய் 3

தேங்காய்த் துருவல் கால் கப்

சீரகம் அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கடுகு, உளுந்து - தலா கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கோவை இலையை அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாசிப் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேகவையுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

அதனுடன் கோவை இலை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவையுங்கள். கோவை இலை வெந்ததும், வேகவைத்திருக்கும் பாசிப் பருப்பு, அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கூட்டு, வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

- ராஜபுஷ்பா

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor