Published : 03 Mar 2018 12:52 PM
Last Updated : 03 Mar 2018 12:52 PM

கட்டிடங்களால் உயர்ந்த பெண்கள்

றவுகளை ஒருங்கிணைத்து கச்சிதமாகக் குடும்பத்தைக் கட்டமைக்கிற பெண்களுக்குச் செங்கலையும் மண்ணையும் குழைத்துக் கட்டிடம் கட்டுவது அத்தனை பெரிய சவால் அல்ல. கட்டிடங்களில் நிபுணத்துவம் கொண்டவர்கள் ஆண்கள்தான் என்ற பலரது நினைப்பைத் தங்களது நேர்த்தியான கட்டிட வடிவமைப்பு மூலம் தகர்த்து வெற்றிகண்ட பெண்களில் சிலரைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வகுப்பில் நுழைந்த முதல் பெண்

இந்தியாவின் முதல் தொழில்முறை கட்டிடக் கலைஞர் எனப் பெயர்பெற்றவர் பெரின் ஜாம்ஷெட்ஜி மிஸ்ட்ரி (Perin Jamshedji Mistri). பார்சி குடும்பத்தைச் சேர்ந்த பெரினின் தந்தை ஜாம்ஷெட்ஜி மிஸ்ட்ரி, இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர். சுமார் நான்கு தலைமுறையாக பெரின் குடும்பத்தினர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுவந்தவர்கள்.

மும்பையில் உள்ள ஸ்ரீ ஜாம்ஷெட்ஜி ஜே.ஜி.பாய் கலைக் கல்லூரியில் கட்டிடக் கலைத்துறையில் டிப்ளமா படிக்கச் சென்ற பெரின், அந்த வகுப்பில் நுழைந்த முதல் பெண். சாதாரண புடவை அணிந்துகொண்டு வகுப்பில் நுழைந்த பெரினை வகுப்பில் இருந்த ஆண்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

பின்னர் தன் சிறப்பான கட்டிட வடிவமைப்பால் வகுப்பு ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். 1936-ல் படிப்பை முடித்த அவர் இந்தியாவின் முதல் தொழில்முறை கட்டிடக் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். பெரினின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது மும்பையின் கார்மிச்செல் சாலையில் அமைக்கப்பட்ட சர் பெஹ்ராம்ஜி கரஞ்சியா பங்களா. அதேபோல் ‘கட்டு ஆலை’யில் இருந்த தொழில் கட்டிடங்கள், குடியிருப்புகள், தற்போது மும்பையில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் ஸ்டிபன் சர்ச் போன்றவை இவரது கட்டிடக் கலைக்கு சான்று.

மண் கட்டிடங்களின் ராணி

ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வரில் பிறந்த ரேவதியின் தந்தை மகாநதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஹிராகுட் அணையைக் கட்டிய பொறியாளர்களில் ஒருவர்.

சிறுவயதிலிருந்தே மகாநதியின் அருகே வசித்துவந்த ரேவதிக்கு அங்குள்ள பழங்குடி மக்களுடன் பழகுவதற்கும் அவர்களின் கலாச்சாரத்தை புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவமே பிற்காலத்தில் பழங்குடி மக்களின் வடிவமைப்புகளைத் தன் கட்டிடங்களில் பயன்படுத்த உதவியாக இருந்தது.

தென் டெல்லியில் அவர் கட்டிய டவர் ஹவுஸ், போபாலில் உள்ள பழங்குடி கிராமம், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓ.பி.ஜிண்டால் மின் உற்பத்தி நிலையத்தில் 33 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய நுழைவாயில் கோபுரம் எனப் புகழ்பெற்ற கட்டிடங்களை உருவாக்கியுள்ளார் ரேவதி காமத். ரேவதியின் கட்டிங்கள் இந்திய கட்டிடக் கலையை பிரதிபலிப்பதால் இவரை ‘மண் கட்டிடங்களின் ராணி’ என கட்டிடக் கலைத் துறையில் அழைக்கிறார்கள்.

கட்டிடங்களின் பாதுகாவலர்

கட்டிடக் கலைஞரான தன்னுடைய தங்கை ரஞ்ஜினி கலப்பாவுடன் (Ranjini Kalappa) 1978-ல் இணைந்து சொந்தமாக கட்டிட நிறுவனத்தைத் தொடங்கினார். பல்வேறு வணிக நிறுவனங்கள், கல்வி வளாகங்கள், பூங்காக்கள், நடைபாதைகள் என இவரின் பங்கு மும்பை மாநகர் முழுவதும் விஸ்தரித்துள்ளது.

பிருந்தா சோமையா கட்டிய கட்டிடங்களில் முக்கியமானவை வணிக நிறுவனமான டாடா கன்சல்டன்சி, நாளந்தா சர்வதேசப் பள்ளி, பேன்யன் பூங்கா போன்றவை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயிண்ட் கதீட்ரல் ஆலயத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவந்து புத்துயிர் அளித்தவர் பிருந்தா.

2004-ல் யுனஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கட்டிடக் கலைஞர்களைப் பற்றி பிருந்தா சோமையா, “ஒவ்வொரு கட்டிடக் கலைஞரும் இந்த உலகத்தில் கட்டப்பட்ட மற்றும் கட்டப்படாத கட்டிடக்ங்களின் பாதுகாவலர்” என்கிறார்.

உலக கவனத்தை ஈர்த்த ஷீலா

தற்போது இந்தியாவின் தலைசிறந்த கட்டிடக் கலைஞராக திகழும் ஷீலா ஸ்ரீபிரகாஷ் உலக அளவில் கட்டிடக் கலையில் ஆளுமை செலுத்தும் முக்கிய நபராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சுமார் 1200-க்கும் மேற்பட்ட கட்டிட வடிவமைப்புப் பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார். சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான, இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட கட்டிடங்களை வடிவமைத்துவருகிறார்.

அதேநேரம் வறுமையில் வாடும் மக்களுக்கு ஏற்றார்போல் குறைந்த கட்டணத்தில் அவர் வடிவமைத்த வீடு 1987-ல் உலக வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1979-ல் ‘ஷில்பா’ என்ற பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் அவருடைய மகளும் கட்டிடக்கலை நிபுணருமான பவித்ரா ஸ்ரீபிரகாஷும் இணைந்து பணியாற்றிவருகிறார்.

உலக பொருளாதார மையம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘எதிர்கால சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு’ திட்டத்தின் முக்கிய 25 நபர்களில் ஷீலா ஸ்ரீபிரகாஷம் ஒருவர். உலக அளவில் கட்டிடத் துறையில் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இவர் 21-ம் நூற்றாண்டின் முதல் 40 கட்டிடக் கலைஞர்களின் ஒருவர்.

சூழலியல் கட்டிடக் கலைஞர்

சூழலியலுக்கு உகந்த கட்டிட முறையை இவர் பின்பற்றிவருகிறார். “வீட்டைக் கட்டும்போது அதில் கண்டிப்பாக மழைநீர் சேமிப்பு திட்டத்துடன் கட்ட வேண்டும்” என்பதை இவர் வலியுறுத்திவருகிறார்.

இவரது கட்டிடக் கலையில் மண் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. விவசாயப் பொருட்களின் கழிவுகளைக் கொண்டும் இவர் பல கட்டிடங்களையும் தன் சொந்த வீட்டையும் கட்டி மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x