Last Updated : 04 Dec, 2018 10:58 AM

 

Published : 04 Dec 2018 10:58 AM
Last Updated : 04 Dec 2018 10:58 AM

அந்தரத்தில் சுழலும் பம்பரம்!

பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா எனப் பல நிறங்களில் பளிச்சிடும்  பம்பரங்களைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும் அல்லவா? அந்தப் பம்பரங்களை வேகமாகச் சுழற்றிவிட்டு கையில் லாகவமாக எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்றோ பம்பரம் விடுவதே பழங்கதையாகிவிட்டது. ஆனால், பம்பர விளையாட்டின் மீதான மோகத்தால், அந்த விளையாட்டை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார் ஹவாய் தீவைச் சேர்ந்த தகேஷி கமிஸாடோ (Takeshi Kamisato).

bambaram-2jpg

பம்பர விளையாட்டில் புதுமையான வழிமுறைகளைப் புகுத்தி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் இவர். பொதுவாகப் பம்பரத்தை தரையிலோ அல்லது உள்ளங்கையிலோதான் சுழற்றுவார்கள்.

ஆனால், தகேஷியோ பம்பரத்தைத் தரையில் படாமலேயே சாட்டையின் உதவியுடன் காற்றிலேயே பல வகைகளில் சுழலச் செய்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பம்பரங்களை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சாகசம் பார்ப்பவர்களை மெய் மறக்க வைக்கிறது.

பம்பரம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. மனதை ஒருநிலைப்படுத்தி, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைக் குவிய வைக்கும் பம்பர விளையாட்டு உதவுகிறது. அதில் தன்னுடைய சாகசத் திறமைகளைப் புகுத்தி ஆயிரக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக மாறியுள்ளார் தகேஷி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x