Last Updated : 05 Dec, 2018 11:41 AM

 

Published : 05 Dec 2018 11:41 AM
Last Updated : 05 Dec 2018 11:41 AM

இது எந்த நாடு? - 87: ஆப்பிரிக்காவின் முத்து!

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு. கிழக்கில் கென்யாவும், வடக்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தெற்கில் தான்சானியாவும் இதன் எல்லைகளாக உள்ளன.

2. இதன் தலைநகரம் கம்பாலா.

3. 1962-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.

4. அதிக அளவில் மலை கொரில்லாக்கள்  இங்கேதான் இருக்கின்றன.

5. ‘ஆப்பிரிக்காவின் முத்து' என்று வர்ணிக்கப்படுகிறது.

6. உலகின் இளமையான நாடு என்று கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பாதிப் பேர் பதினைந்து வயதுக்குக் குறைவானவர்கள்.

7. இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி காபி.

8. இந்த நாட்டின் கொடியில் அதன் தேசியப் பறவையான மாகேம் (ஒரு வகைக் கொக்கு) இடம்பெற்றுள்ளது.

9. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியாவின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.

10. இடி அமீன் ஆட்சி செய்த நாடு.

விடை: உகாண்டா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x