Published : 02 May 2019 09:16 AM
Last Updated : 02 May 2019 09:16 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய நண்பர்களால் தொல்லைகள், வீண் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் வரும். வாகனம், வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கடகம்: சமயோசித புத்தியால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள். கோயில் பூஜைகள், விழாக்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். இருமல், காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கன்னி: மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.

தனுசு: சிக்கல்களுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். வீட்டில் கிணறு தூர்வாருதல், ஆழ்துளைக் கிணறு அமைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தடைபட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும்.

மீனம்: வீண் செலவுகள் ஏற்படக் கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் எதிர்பாராத கருத்து வேறுபாடு உண்டாகும். சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x