Published : 13 Apr 2019 09:41 AM
Last Updated : 13 Apr 2019 09:41 AM

சுவாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே. நீங்கள் விடா முயற்சி கொண்டவர்கள்.

இந்த வருடம், எதிலும் மிகக் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பெண்கள் எந்தக் காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக நடந்தேற வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழுக் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.

மதிப்பெண்கள்: 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்

+ வேலை மாற்றம் உண்டு

- அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x