'இந்து தமிழ் திசை' தீபாவளி மலர் 2018

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘இந்து தமிழ்‘ நாளிதழின் ‘தீபாவளி மலர் 2018’ ரசனையோடு படித்து மகிழவும், பாதுகாத்து வைக்கவும் கூடிய படைப்புகளைக் கொண்டிருக்கிறது.

விநாயகர் வழிபாடு, தமிழக மலைக்கோயில்கள் குறித்து ஆன்மிகப் பகுதிக் கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-வது ஆண்டில், அந்த உரையின் முக்கியத்துவத்தை மற்றொரு கட்டுரை பேசுகிறது.

தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்கள்-கவிஞர்களான, பழனிபாரதி, தாமரை, யுகபாரதி, வே.ராமசாமி, ஏகாதசி,மோகன் ராஜன் ஆகியோரின் கவிதைகள், புதுப் புது வண்ணங்களை வரைந்து காட்டுகின்றன.

முன்னணி எழுத்தாளர்களான சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்துமதி, தேவிபாலா, மேகலா சித்ரவேல் உள்ளிட்டோரின் கதைகள் இந்த மலருக்கு அர்த்தமுள்ள வகையில் கனம் சேர்க்கின்றன.

தமிழ் சினிமாவில் நாயகர்களின் ஆதிக்கத்தைத் தாண்டி பல நாயகிகள் சாதித்திருக்கிறார்கள். பானுமதி முதல் சிம்ரன்வரை கடந்த நூற்றாண்டில் சாதித்த 10 நாயகிகளைப் பற்றிய சித்திரங்களைத் தருகின்றன, சினிமாப் பகுதிக் கட்டுரைகள்.

தமிழகத்தின் சில ஊர் பெயர்களைச் சொன்ன உடனேயே, அந்த ஊர்களின் அடையாளமாக மாறிவிட்ட தொழில்கள் நம் நினைவுக்கு வரும். அந்த வகையில் சிவகாசி, திருப்பூர் பற்றி மட்டுமல்லாமல் மார்த்தாண்டம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களும் குறிப்பிட்ட சில தொழில்களை மையமாகக் கொண்டு வளர்ந்துள்ளதை ‘ஊரும் தொழிலும்’ பகுதிக் கட்டுரைகள் அலசுகின்றன.

தீபாவளியில் சமைத்து மகிழ்வதற்கென்றே சிறப்பு சமையல் குறிப்புகளை சர்வதேச விருது பெற்ற செஃப் உமா சங்கர் வழங்கியுள்ளார்.

தீபாவளி மலரை ரூ.118 என்ற சலுகை விலையில் பெற க்ளிக் செய்க: https://bit.ly/2OY93DW

(offer Price - Rs.118/(including shipping charges)

Inland   118

Buy Now

‘தி இந்து’ பொங்கல் மலர் 2018

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பொங்கல் மலர் தயாராகிவிட்டது. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் மகிழ்விக்கும் வகையிலும் ரசனையை மேம்படுத்தும் வகையிலும் இந்த பொங்கல் மலரும் அமையும். – பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள்; கைலாய யாத்திரை முதல் பிள்ளையார்பட்டி பிள்ளையார் வரையிலான ஆன்மிகக் கட்டுரைகள்; ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பைப் பேசும் படங்கள் நிறைந்த கட்டுரை; கேரளம், கர்நாடகம், ஆந்திரம் முதல் ஆசிய நாடுகள், கனடா வரையிலான பொங்கல் கொண்டாட்டங்களைக் கூறும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள்; உலகம் வியக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி சினிமா ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷின் ஒளிப்படத் தொகுப்பு; பிரபல பாடகி சுதா ரகுநாதன், நாட்டிய ஆசான் ஹேரம்பநாதனின் பேட்டிகள்; கர்னாடக இசையின் பிதாமகரான தியாகராஜரின் 250-வது ஜயந்தியை ஒட்டி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, மூத்த எழுத்தாளர் வீயெஸ்வி உள்ளிட்டோர் எழுதிய இசை மணம் கமழும் கட்டுரைகள்; 20 இசைக்கருவிகளின் சிறப்பு, தனித்தன்மையை சுருக்கமாகக் கூறும் சொற்சித்திரங்கள்; கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பேசப்பட்டுவரும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்க மொழி சினிமாக்களை ஆழமாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் சினிமா கட்டுரைகள்; யுகபாரதி, அ. வெண்ணிலா,  என். ஸ்ரீராம்  உள்ளிட்டோர் எழுதிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மண் மணம் கமழும் ஐந்து சிறுகதைகள்;.

(Cover Price - Rs.120/-; + shipping charges Rs.25 = Rs.145/-)

Inland   145

Buy Now

தினுசு தினுசா விளையாட்டு

விளையாட நேரமும் சூழலுமின்றி, விளையாட்டையும் மறந்து நிற்கும் குழந்தைகளை மீண்டும் விளையாட அழைக்கிறது இந்நூல்.

நம் மரபு சார்ந்த பழங்கால விளையாட்டுகள் தொடங்கி, தற்கால குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டுகள் வரை இந்நூலிலுள்ள 50 விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

( Cover Price - Rs.160/-; + shipping charges Rs.20 = Rs.180/- )

Inland   180

Buy Now

உயிர் வளர்த்தேனே

பிரபல எழுத்தாளர் போப்புமெல்லிய நகைச்சுவையுடன் உணவு அரசியல், பாரம்பரிய சமையல் முறைகள், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். இதுநலம் வாழஇணைப்பிதழில் தொடராக வந்தது.

(Cover Price - Rs.260/-; + shipping charges Rs.30 = Rs.290/-)

Inland   290

Buy Now

மரபு மருத்துவம்

பிரபல சித்த மருத்துவர் விக்ரம் குமார், பல்வேறு உடல் உபாதைகளுக்குச் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள சிகிச்சை முறைகள், உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி ‘நலம் வாழ’ இணைப்பிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

(Cover Price - Rs.200/-; + shipping charges Rs.25 = Rs.225/-)

Inland   225

Buy Now

சந்தேகம் சரியா?

பிரபல மருத்துவர் டாக்டர் கு.கணேசன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ‘கேள்வி பதில்’ வடிவத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

(Cover Price - Rs.200/-; + shipping charges Rs.25 = Rs.225/-)

Inland   225

Buy Now

மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்

Tamil Nadu is rich in tradition and the tradition has many amazing components as its pride. The book gives us an idea of what is ethnic food belonging to various districts of Tamil Nadu. 

(Cover Price - Rs.250/-; + shipping charges Rs.30 = Rs.280/-)

Inland   280

Buy Now

இன்று இவர்கள் பிறந்த நாள் (2 Volumes)

The book gives us brief yet precise accounts of various personalities. The write ups on the personalities are given under the date of their respective birthdays. The book can be quite useful for those who aspire to become IAS and IPS officers. It's a collector's item. 

(Cover Price - Rs.300/-; + shipping charges Rs.30 = Rs.330/-)

Inland   330

Buy Now

ஜெயகாந்தனோடு பல்லாண்டு

P.S. Kuppusami, who had been a close friend and associate of the great Tamil writer Jayakanthan, illustrates his interesting and insightful experiences with the author.

(Cover Price - Rs.150/-; + shipping charges Rs.20 = Rs.170/-)

Inland   170

Buy Now

எம் எஸ்: நீங்காத நினைவுகள்

The special issue on the legendary MS Subbulakshmi gives us an exciting experience of witnessing the life and great musical travel of India’s Nightingale.

(Cover Price - Rs.180/-; + shipping charges Rs.25 = Rs.205/-)

Inland   205

Buy Now

வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்!

'தி இந்து' தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் ந.வினோத் குமார், 'உயிர்மூச்சு' இதழில், பறவைகள் குறித்து எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும், ஏதேனும் ஒரு பறவை சிறகடித்துக் கொண்டிருக்கிறது, மனித குலத்துக்கான ஒரு செய்தியைச் சுமந்து...

(Cover Price - Rs.150/-; + shipping charges Rs.30 = Rs.180/-)

Inland   180

Buy Now

வேலையற்றவனின் டைரி!

பிரபல சிறுகதை எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தனது 'நாஸ்டால்ஜியா' நினைவுகளைத் துள்ளும் நடையில், சிரிப்பு மொழியில் 'இளமை புதுமை' இணைப்பிதழில் எழுதிய 'குறுகுறு' குறும்புத் தொடர், இப்போது புத்தகமாக!

(Cover Price - Rs.250/-; + shipping charges Rs.30 = Rs.280/-)

Inland   280

Buy Now

பொருள்தனைப் போற்று!

இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசும் நூல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால் எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல்.

(Cover Price - Rs.200/-; + shipping charges Rs.30 = Rs.230/-)

Inland   230

Buy Now

சினிமா எடுத்துப் பார்!

திரைப்படத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள எஸ்.பி.முத்துராமனின் சொல்லப்படாத பல தருணங்களைத் தாங்கி வரும் நூல். எடிட்டிங் உதவியாளராக திரைத் துறையில் அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களை இயக்கியும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழும் எஸ்.பி.முத்துராமனைக் குறித்த முக்கியமான ஆவணம் அரிய புகைப்படங்களின் தொகுப்போடு வெளிவருகிறது.

(Cover Price - Rs.300/-; + shipping charges Rs.30 = Rs.330/-)

Inland   330

Buy Now

தீபாவளி மலர் 2017

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’ தமிழ் தீபாவளி மலர்

காசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன.

சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், பிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட்ட அம்சங்களை சினிமா பகுதி அலசுகிறது.

புதுமைப்பித்தனின் மரபுத் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா என்கிற ‘தாமிரபரணி நால்வர்’ நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு புது வீச்சைத் தந்தவர்கள். அவர்கள் நால்வரையும் ஒன்றாகச் சந்திக்க வைத்தது பற்றிய பதிவு புதுமையான அனுபவத்தைத் தரும்.

புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, பிரமிள், சுந்தர ராமசாமி என தமிழ் இலக்கிய மேதைகள் மொழிபெயர்த்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இலக்கிய ரசனையை மேம்படுத்தக் கூடியவை.

தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் அடையாளமாக உள்ள உணவு வகைகளின் சிறப்பம்சங்கள், பண்பாடு, வரலாறு இந்த இதழில் விரிவாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

நம் வாழ்க்கையில் நெருக்கமாக உறவாடிக் காணாமல் போய்விட்ட பல பொருட்கள், அம்சங்கள் குறித்து மலரின் குறுங்கட்டுரைகள் அசைபோட வைக்கின்றன.

பெண்களின் மேம்பாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நாடு போற்றும் நான்கு பெண் ஆளுமைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல்வேறு அம்சங்களுடன் தீபாவளிப் பண்டிகை தரும் மகிழ்ச்சியை ‘தி இந்து’ தீபாவளி மலர் இரட்டிப்பாக்கும்.

(Cover Price - Rs.140/-; + shipping charges Rs.20 = Rs.160/-)

Inland   160

Buy Now

இசை மேடையில் பெண்கள்

தாமரை மலர் மீதமர்ந்து வீணையை மீட்டும் சரஸ்வதி, இந்திய இசை மரபில் இசைக் கடவுள். அவருடைய வழியில் வந்த இந்த பெண் இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள் மூலம் நம் மனதை ஆற்றுப்படுத்தும் இசையை வாரி வழங்கியிருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்.

(Cover Price - Rs.125/-; + shipping charges Rs.25 = Rs.150/-)

Inland   150

Buy Now

உள்ளாட்சி

கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்த சமயம். உடனடியாக மனதில் தோன்றியது இதுதான் - ஒவ்வொரு முறையும் உள்ளாட்சித்  தேர்தல் வரும்போதெல்லாம் மக்கள் வாக்களிக்கிறார்கள், பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள், சம்பிரதாய நடைமுறைகளைபோல திட்டங்கள் அரைகுறையாக  நிறைவேற்றப்படுகின்றன. விவசாயம் தொடங்கி கிராம, நகர உள்கட்டமைப்பு வரை பெரியதாக வளர்ச்சி இல்லை. வளர்ச்சித் திட்டங்களை ஊழல் அரித்துக்கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் அடிதடி, கொலைகள்வரை நீள்கின்றன. அப்படி எனில் உண்மையான உள்ளாட்சி  என்பதுதான் என்ன? உள்ளாட்சி என்பதும் வழக்கமான தேர்தல் ஜனநாயகம் தானா? மூன்றாவது அரசு என்கிற உள்ளாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டதின் நோக்கம் என்ன? காந்தி விரும்பிய பஞ்சாயத்து ராஜ்ஜியமும் தற்போதைய நடைமுறையில் இருக்கும் உள்ளாட்சி நிர்வாகமும் ஒன்றுதானா? பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு சாமானிய மக்கள் அரசியல் உரிமை பெற்றிருக்கிறார்களா? உள்ளாட்சி தொடர்பில் சாமானிய மக்களுக்கான அதிகாரங்கள் என்ன? உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? இப்படி எல்லாம் கிளைக் கிளைகளாய் கேள்விகள் எழுந்தன.

(Cover Price - Rs.200/-; + shipping charges Rs.30 = Rs.230/-)

Inland   230

Buy Now

மாய விரோதி

குழந்தைகளுக்குக் கடினமான விஷயத்தை எளிதில் புரிய வைக்க சிறந்த வழி சித்திரக் கதைளே. அறிவியல் புனைவு கதைகள், வரலாற்றுக் கதைகள், மாயாஜாலக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் எனத் தமிழில் வராத சித்திரக் கதைகளே இல்லை. சித்திரக் கதைப் புத்தகங்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு சென்ற தலைமுறைவரை அத்தனை பிணைப்பாக இருந்தது.


ஆனால், சித்திரக் கதைகளின் வருகை இப்போது குறைந்துவிட்டது. குழந்தைகளுக்கு முதல் புத்தகமாகப் பாடப் புத்தகங்களே அறிமுகமாகின்றன. குழந்தைகளிடம் வாசிப்பை வளப்படுத்த வேண்டும் எனில் சித்திரக் கதைகள் அதிகம் வர வேண்டும். அந்த முயற்சியின் தொடக்கப் புள்ளியாக ‘தி இந்து’ குழந்தைகள் இணைப்பிதழலான ‘மாயா பஜார்’ பகுதியில் ‘மாய விரோதி’ என்ற சித்திரக் கதையைத் தொடராக வெளியிட்டோம்.


மனித தலையுடைய வெட்டுக்கிளி உடலைப் பெற்ற சிறுவன், தன் சுய உருவத்தை அடைய ஜிம்பா என்ற விசித்திரமான பாத்திரம்,  உதவும் கதைதான் இது. ‘மாய விரோதி’யைத் தேடி வெவ்வேறு உலகுக்கு ஜிம்பா  செல்லும்போது நிகழும் திருப்பங்களையும் மாயாஜாலங்களையும் இந்தச் சித்திரக் கதை வழியே ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாகச் சொன்னார் இந்தக் கதையின் ஆசிரியர் முத்து. அதற்கு வலு சேர்க்கும் வகையிலான ஓவியங்களுக்கும் கதைக்குள் எல்லோரையும் ஈர்த்தது.

(Cover Price - Rs.170/-; + shipping charges Rs.20 = Rs.190/-)

Inland   190

Buy Now

தடைகள் தாண்டி பாயும் நதி

சிவன் உமையவளுக்குத் தன் உடம்பின் சரி பாதியைத் தந்தான் என்பதில் தொடங்குகிறது பெண்களுக்கான சம உரிமை என்கிறார்கள். சமூகத்தில் சற்றேறக்குறைய சரி பாதியினர் பெண்களே. இருப்பினும், வீட்டிலும் நாட்டிலும் போற்றப்பட வேண்டிய பெண்களின் நிலைமை உண்மையில் எப்படி இருக்கிறது என்னும் யதார்த்தத்தை அலசும் கட்டுரைகள் இவை. வீட்டுக்குள்ளும் வீட்டை விட்டு வெளியேறி சமூக உறவுக்குள்ளும் பயணப்படும் பெண்கள் எத்தனையோ இடர்ப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றை எல்லாம் சாதுர்யத்துடன் சமாளித்து வாழ்வில் முன்னேறிவருகிறார்கள். ஆனால், ஓர் ஆணுக்கு எளிதில் கிடைக்கும் பல உரிமைகளை இன்னும் ஒரு பெண் போராடித்தான் பெற வேண்டியதிருக்கிறது. இந்த நிலைமை சமூகத்தில் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது, குடும்பங்களிலும் இதுதான் நிலைமை. இதை மாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதலை உணர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன பிருந்தா சீனிவாசனின் எழுத்துகள்.

(Cover Price - Rs.120/-; + shipping charges Rs.25 = Rs.145/-)

Inland   145

Buy Now

சினிமா ரசனை

நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட திரைப்படம் என்னும் கலையை நாம் எந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறோம்? உலகத் திரையுலகின் வெளிச்சத்தில் சினிமாவின் பன்முகங்களை அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.

(Cover Price - Rs.225/-; + shipping charges Rs.25 = Rs.250/-)

Inland   250

Buy Now

ஆங்கிலம் அறிவோமே

ஆங்கில மொழியின் ஆச்சரியமான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் அதிகம் அறிந்திராத நுணுக்கங்களை நகைச்சுவையாகவும், எளிமையாகவும் விளக்கும் தொடரின் தொகுப்பு. இதன் முதல் இரண்டு பாகங்கள் ‘தி இந்து’ வெளியீடு புத்தகமாக வெளிவந்து, சிறப்பாக விற்பனை ஆகி உள்ளது.

(Cover Price - Rs.140/-; + shipping charges Rs.20 = Rs.160/-)

Inland   160

Buy Now

எங்க ஊரு வாசம்

நம் முன்னோர்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து மறைந்த கிராமங்களுக்கு இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும். அவர்களின் பாரம்பரியமும் திருமணச் சடங்குகளும் நம்மை வியக்கவைக்கும்.

(Cover Price - Rs.130/-; + shipping charges Rs.20 = Rs.150/-)

Inland   150

Buy Now

சட்டமே துணை

பெண்களுக்குத் துணை நிற்கும் சட்டங்கள் குழித்த விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கலங்கரைவிளக்கமாக இது வழிகாட்டும்.

(Cover Price - Rs.100/-; + shipping charges Rs.20 = Rs.120/-)

Inland   120

Buy Now

நாட்டுக்கொரு பாட்டு

50 நாடுகளின் தேசிய கீதங்கள் அடங்கிய புத்தகம்

(Cover Price - Rs.170/-; + shipping charges Rs.20 = Rs.190/-)

Inland   190

Buy Now

காற்றில் கலந்த இசை

இளையராஜாவை நாம் ஏன் ரசிக்கிறோம்? அவர் இசை நம் உயிரில் கலந்தது எப்படி? ரசனையின் ரசவாதத்தை நெருக்கமாக அணுகிப் பார்க்கிறார் வெ. சந்திரமோகன்.

(Cover Price - Rs.140/-; + shipping charges Rs.25 = Rs.165/-)

Inland   165

Buy Now

தொழில் கலாச்சாரம்

தொழில் புரிவது ஒரு சவால். அதைக் கற்றுக்கொள்வது இன்னொரு சவால். அந்தச் சவாலைச் சுவையான அனுபவமாக மாற்றக்கூடிய நூல் இது.

(Cover Price - Rs.150/-; + shipping charges Rs.25 = Rs.175/-)

Inland   175

Buy Now

நீர் நிலம் வனம்: கடல்

நீர் நிலம் வனம்: கடல் - சமஸ்

சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன.

பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார்.

வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.

(Cover Price - Rs.180/-; + shipping charges Rs.40 = Rs.220/-)

Inland   220

Buy Now