Last Updated : 20 Jan, 2019 10:50 AM

 

Published : 20 Jan 2019 10:50 AM
Last Updated : 20 Jan 2019 10:50 AM

கர்நாடகா, தென் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லுக்கே முன்னுரிமை: கொள்முதல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படும் உள்ளூர் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றும் தென் மாவட்ட வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டும் பணியாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக இப் பகுதியில், பல்வேறு இடங்களில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக ஒரு குவின்டால் நெல் பொது ரகத்துக்கு ரூ.1,800, சன்ன ரகத்துக்கு ரூ.1,840 என வழங்குகிறது.

நிபந்தனையின்றி கொள்முதல்இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம், தூசி, கருக்காய் அதிகம் உள்ளதாகக் கூறி கொள்முதல் செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங் களைச் சேர்ந்த வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்து வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அரசால் அதிக அளவில் திறக்கப்படுகிறது. ஆனால், தென் மாவட்ட நெல் வியாபாரிகள் அப்பகுதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கிய நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தற்போது விற்று வருகின்றனர்.

அதேபோல, கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியிலிருந்து நாள்தோறும் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு டெல்டா மாவட்டங்களுக்கு வரும் கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரி கள், உள்ளூர் வியாபாரிகள் துணையுடன் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விற்று வருகின்றனர்.

கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 2 லாரிகளில் ஏற்றிவரப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நெல் மூட்டைகளை அப்பகுதி விவசாயிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதிக தொகை கிடைப்பதால்...

இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் டெல்டா விவசாயிகள் அலைக்கழிக்கப் படுவது குறித்து காவிரி டெல்டா நெல் வியாபாரிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் க.பஞ்சாபிகேசன் கூறியதாவது:டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இதர மாவட்டங்களில் விளையும் நெல்லை வியாபாரிகள் வாங்கிச் சேமித்து வைத்திருந்து, இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் நெல் வியாபாரிகள் உதவு கின்றனர். விவசாயிகளிடம் 40 கிலோ கொண்ட ஒரு நெல் மூட்டையைக் கொள்முதல் செய்வதற்கு ரூ.40 வரை கொள்முதல் பணியாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். வியாபாரி கள் ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை கொடுக்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து கிடைக் கும் தொகையைவிட, வியாபாரி களிடமிருந்து அதிக தொகை கிடைப்பதால் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்படும் நெல்லையும், தென் மாவட்ட வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லையும் கொள்முதல் செய்யவே பணியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் ‘ஜெஎல்' என்ற ரகம் அதிக அளவில் விளைச்சல் கண்டுள்ளது. டெல்டா மாவட்டங் களில் விளையும் ஆடுதுறை- 38 ரகம் போலவே இருக்கும் இந்த நெல்தான் தற்போது கர்நாடக வியாபாரிகளால் இங்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத் தின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் ஜி.சிற்றரசுவிடம் கேட்ட போது, “கர்நாடகா நெல்லை யாரும் கொள்முதல் செய்ய வேண்டாம் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சில விவசாயிகளே வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். சில நேரங்களில் இத்தகைய வியாபாரிகள் நெல்லை கொண்டுவந்து தன்னுடைய வயலில் விளைந்தது எனக்கூறி விற்றுவிடுகின்றனர். ஆனால், பணம் பட்டுவாடா வங்கி வாயிலாகவே வழங்கப்படுகிறது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 304 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1 லட்சத்து 18 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x