Last Updated : 11 Sep, 2018 07:57 AM

 

Published : 11 Sep 2018 07:57 AM
Last Updated : 11 Sep 2018 07:57 AM

மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்து மாறு கர்நாடக முதல்வர் குமார சாமி பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய‌ அணை கட்ட முடிவெடுத்துள்ளது. 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும், நீர்மின் உற்பத்தி திட்டமும் (400 மெகாவாட் திறன்) அமைய உள்ளது. இதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து, மத்திய நீர்வளத் துறையின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் துணை முதல்வர் பரமேஷ்வர், நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், பொதுப்பணித் துறை அமைச்சர் ரேவண்ணா உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறும்போது, “மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி கோரி மனு அளித்தோம். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டோம். எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதேபோல கர்நாடகாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,199 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தோம்” என்றார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது மேகேதாட்டு திட்டத்தை காலதாமதம் செய்யாமல், உடன டியாக நிறைவேற்ற உதவி புரிய வேண்டும். திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி உதவியும், தமிழக அரசின் அனுமதியையும் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “மேகேதாட்டு திட் டத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு எங்களது திட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும். இந்த திட்டம் தொடர் பாக தமிழகத்தின் சந்தேகங்களை விவாதிக்க தயாராக இருக்கிறோம். அண்டை மாநிலமான தமிழ கத்துடன் நட்பு பாராட்ட விரும்புகி றோம். கர்நாடகாவில் காவிரி ஆற் றின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை.

இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மீறவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x