Last Updated : 03 Sep, 2018 07:51 AM

 

Published : 03 Sep 2018 07:51 AM
Last Updated : 03 Sep 2018 07:51 AM

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் வீடு திரும்பினார்

சிறுநீரக கோளாறால் பாதிக் கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலையில், தற்காலிகமாக டயாலிசிஸ் என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் கடந்த ஜூலை 7-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு கடந்த 31-ம் தேதி மாலை திடீரென்று மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்த னர். டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை காரணமாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுக்க உள்ள அவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மியாட் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். மேலும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்னும் 4 மாதத்தில் மீண்டும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

விஜயகாந்த் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதும் அவ ரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. இதை யடுத்து அவர் நலமாக இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அப்பா நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் வீடியோ மூலம் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன் னெப்போதும்போல் தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x