Last Updated : 20 Jul, 2018 10:57 AM

 

Published : 20 Jul 2018 10:57 AM
Last Updated : 20 Jul 2018 10:57 AM

அம்மாபேட்டையில் வவ்வால் தோப்பு..!

சேலத்து மாம்பழம் மீது நமக்கு இருக்கும் அதே மயக்கம் வவ்வால்களுக்கும் உண்டு போல. பழந்தின்று உயிர் வாழும் வவ்வால்களை கூட்டம் கூட்டமாக பார்க்கக்கூடிய பாக்கியம் சேலம் மக்களுக்கு கிடைத்துள்ளது. அரிதாகக் காணக்கூடிய இவற்றை சேலத்தின் அம்மாபேட்டையில் காண முடிகிறது.

திகில் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களே வவ்வால்கள்தான். பெரும்பாலும் கோயில் வளாகங்கள், வனப்பகுதிகள், உயரமான மரங்களில் வவ்வால்கள் கூட்டமாக காணப்படும். ஆனால், மக்கள் வசிப்பிடங்களில் வவ்வால்களை அவ்வளவாக பார்க்க முடி யாது. ஆனால், ஆட்டோக்கள் ஓடும் அதிர்வு நிறைந்த இடத்தில் வவ்வால்கள் வசிக்கின்றன.

சேலம் அம்மாபேட்டையில் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்டு 100 ஆண்டு பழமைவாய்ந்த பிரம்மாண்டமான நிலத்தடி குடிநீர் தொட்டி இருக்கும் பகுதி அரச மரம், அசோக மரம், வேப்ப மரம், புளிய மரம் என வகை வகையான மரங்கள் சூழ் தோப்பாக இருக்கிறது. இந்த மரங்களில் காய், கனி, பூக்கள் முளைத்து தொங்குகிறதோ இல்லையோ.. கொத்துக் கொத்தாக வவ்வால்கள் தொங்குகின்றன.

வவ்வால்களை தினமும் தரிசிக்கும் மாநகராட்சி ஊழியர் குமார் நம்மிடம் கூறும்போது, ‘‘21 வருடங்களாக இந்த வவ்வால்களை பார்த்து வருகிறேன். பகலில் மரத்தில் தொங்கியபடி இருக்கும் வவ்வால்கள், மாலையில் வெளியே கிளம்பிவிட்டு காலையில் திரும்பிவிடும். தீபாவளி பண்டிகையின்போது வெடி சத்தம் தாங்க முடியாமல் வேறு இடத்துக்கு பறந்து சென்றுவிடும். இதே அம்மாபேட்டையை சேர்ந்த பலருக்கும் இந்த இடத்தில் வவ்வால் தோப்பு இருப்பதே தெரியாது’’ என்றார்.

தற்போது வவ்வால் தோப்பு இருக்கும் இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு விரைவில் திறப்பு விழாவும் காணப்பட உள்ளது. வவ்வால் பூங்கா என்று பெயர் வைக்கக்கூடிய அளவுக்கு பூங்காவில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிக்கின்றன.

பறவை போல பறந்தாலும் அது பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கும்மிருட்டிலும் எதன் மீதும் மோதா மல் அதிவேகமாக பறந்து செல்லும் வவ்வால்கள் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் மீயொலியை பயன்படுத்து

பவை. வாயிலேயே உண்டு, வாயிலேயே கழிவை வெளியேற்றும் வவ்வால்களின் கழிவுகள் மிகச் சிறந்த உரம். இதுபோன்ற பல அறிவியல் ரீதியான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன வவ்வால்கள்.

வவ்வால்களுக்காக இங்கு அமைக்கப்பட்டு வரும் பூங்காவுக்கு வவ்வால் பூங்கா என பெயர் வைத்து, அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும். மக்கள் பார்த்து ரசிக்க தொலைநோக்கி வசதி செய்யவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள்.

சாதாரணமாக எங்கும் பார்த்துவிடமுடியாத அளவுக்கு அருகிவரும் வவ்வால்களைப் பாதுகாப்பது மனித சமூகத்தின் முக்கியமான கடமைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x