Last Updated : 16 Sep, 2016 01:22 PM

 

Published : 16 Sep 2016 01:22 PM
Last Updated : 16 Sep 2016 01:22 PM

உ.பி.யில் சமாஜ்வாதியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என காங்கிரஸ் உறுதியாக மறுத்துள்ளது.

கடந்த வாரம் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச் சாரத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.

இந்நிலையில் ராகுலின் பிரச்சாரம் குறித்துப் பேசிய முதல் வர் அகிலேஷ் யாதவ், ‘ராகுல் நல்ல மனிதர். உத்தரப்பிரதேசத்தில் அவர் கூடுதல் நேரத்தை செலவிடுவதாக இருந்தால் அவருடன் நட்புறவை வைத்துக் கொள்ளலாம்” எனக் கூறியிருந்தார்.

இதனால், உபி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், இதனைக் காங்கிரஸ் தலைமை உறுதியாக மறுத்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், “ராகுல் மற்றும் அகிலேஷுக்கு இடையே நிலவும் நல்லுறவு தனிப்பட்டது. இதை வைத்து அர சியல் கணிப்புகளைக் கூற முடி யாது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி

தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினோம். இது முடியாததால் தனித்துப் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, சமாஜ்வாதியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ஆண்ட காங்கிரஸ் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் அதிகாரத்தை இழந்தது. அதன்பின் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி கள் தனித்தனியாகவோ, கூட்டணி அமைத்தோ ஆண்டு வருகின்றன.

எனவே, 27 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதால் உ.பி.யின் நிலை மோசமாகி உள்ளது என்ற பிரச்சார கோஷத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

தேர்தல் ஆலோசகரான பிர ஷாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு வியூகம் அமைத்துக் கொடுத்துள் ளார். இவரது யோசனைப்படி ராகுல் நடத்தி வரும் கட்டில் சபைகளுக்கு கிராமவாசிகளின் கூட்டம் அதிகமாக கூடுகிறது.

ஆனால், அவை ராகுலைப் பார்க்கவா அல்லது கூட்டத்துக்குப் பிறகு கட்டில்களைத் தூக்கிச் செல்லவா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில், ராகு லின் மூன்றுக்கும் மேற்பட்ட கூட் டங்களில் சபைக்காக போடப்பட்ட கட்டில்களை கிராமவாசிகள் கையோடு எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x