Published : 11 Jul 2018 08:45 AM
Last Updated : 11 Jul 2018 08:45 AM

இப்படிக்கு இவர்கள்: சத்யஸ்ரீ ஷர்மிளாவுக்கு ஆசிரியர் பாராட்டு!

சத்யஸ்ரீ ஷர்மிளாவுக்கு ஆசிரியர் பாராட்டு!

மிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யஸ்ரீ ஷர்மிளா, பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்போது தலைமைப் பண்பு மிக்க சிறந்த மாணவர் மட்டுமல்ல, நல்ல கலைத்திறன் கொண்டவரும்கூட. அவர் திருநங்கை களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. திருநங்கைகள் குறித்த சமூகத்தின் கண்ணோட்டம் மகிழ்ச்சிக்குரிய வகையில் மாறிவருவது வரவேற்கத்தக்கது. தன்னுடைய தந்தை ஏற்றுக்கொள்வார் என்ற அவருடைய நம்பிக்கை வீண்போகாது என நம்புவோம். சத்யஸ்ரீ ஷர்மிளாவின் ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன். விளிம்புநிலை மனிதர்களான திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சிகள் தொடரட்டும். அவருக்கு என் வாழ்த்துகள்!

- சோ.சுரேஷ், துறைத் தலைவர் - வணிகவியல்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி.

அரசின் குரலை அலட்சியம் செய்வார்களா?

ஜூலை -10 அன்று வெளியான ‘சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம்: யார் சொல்வது சரி? கட்டுரையில் இருவரின் கருத்துகளுமே தனித்தனியாகப் பார்த்தால் சரியாகவே தோன்றுகிறது. ஆனால், ஊடகங்களில் அந்தப் பகுதியில் நடைபெறுவதைப் பார்க்கும்போது, அரசு தனது கடமையிலிருந்து நழுவி, ஏதோ கட்டாயத்துக்கு உட்பட்டு இந்த சாலைத் திட்டத்தை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்ததைப் போன்று தோன்றுகிறது. உண்மையிலேயே திட்டத்தைப் பற்றி மக்களிடம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதா? அவர்களும் புரிந்துதான் போராடுகிறார்களா என்று யோசிப்பதே இல்லை. தனிப்பட்ட சிலரின் துாண்டுதலால் மக்கள் போராடுகிறார்கள் என்பது ஏற்கக்கூடிய குற்றச்சாட்டாக இல்லை. தனிப்பட்ட சிலரின் குரலைக் கேட்கும் அவர்கள், அரசின் குரலையா அலட்சிம் செய்துவிடப் போகிறார்கள்? அரசு, போராடும் மக்களுக்குத் தகுந்த விளக்கத்தை அளித்து, அவர்களையும் ஆதரிக்க வைக்கத் தவறியது ஏன்? தவறு எங்கே என்று கண்காணித்து, அதைச் சரிசெய்த பிறகு திட்டத்தைத் துவக்கினால் வெற்றிகரமாக முடியும் அல்லவா?!

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

இலக்கியவாதிகளின் வாழ்க்கை

சில வாரங்களாக சி.மோகன் எழுதிவரும் ‘நடைவழி நினைவுகள்’ பகுதியில் சிறந்த இலக்கியவாதிகளின் வாழ்வின் வித்தியாசமான தருணங்கள் மனதை உலுக்குகின்றன. ஜி.நாகராஜன் ஒரு தனித்தன்மைகொண்ட மனிதர் என்றாலும் அவர் தனிமையில் வாழ நேர்ந்தது மனதுக்கு மிகவும் வருத்தமளிக் கிறது. புதுமைப்பித்தன் ஏழ்மையில் உழன்றாலும் அன்பு மனைவியின் ஆறுதலையும் தேறுதலையும் பெற்றதில் சற்றே னும் ஆசுவாசப்பட்டிருப்பார். ஆனால், ஜிஎன் எழுத்தாற்றல் அவருக்கு வாழ்வின் இக்கட்டான தருணங்களில் ஓர ளவுக்குத்தானே உதவியிருக் கிறது. நண்பர்கள் இல்லாமல் போயிருந்தால் அநாதைப் பிணமாக, அடையாளம் தெரியாமலே மறைந்திருப்பாரே என்று நினைக்கும்போதே எழும் துக்க உணர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை. மனைவி, குழந்தைகளிடமிருந்து அவரைப் பிரித்துவைத்தது எது? எழுத்தாளர் களுக்குப் போதுமான அளவுக் குத் தேவைகள் நிறைவேறுகின்றனவா என்றும் எண்ணம் தோன்றுகிறது.

- ஜே.முஹம்மது அலி, நாகூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x