Published : 03 Jul 2018 09:22 AM
Last Updated : 03 Jul 2018 09:22 AM

இப்படிக்கு இவர்கள்: வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது

வாசகர்களின்

எண்ணம்

நிறைவேறியது

‘இ

ந்து தமிழ்’ அருமையான தலைப்பு. நண்பர்களிடம் நம் நாளிதழ் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் ‘எழுத்துப் பிழையே இல்லாமல் வாசகர்களுக்குத் தேவையான கட்டுரைகளுடன் தமிழில் வரும் ஒரு அருமையான நாளிதழ்’ என்ற எனது வாதத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், ‘தி இந்து’ என்ற தலைப்பைச் சுட்டிக்காட்டி, ‘தலைப்பிலேயே ஆங்கில வார்த்தை உள்ளதே’ என்று என்னிடம் வாதம்புரிவார்கள். நண்பர்களிடம், கொஞ்சம் பொறுங்கள் நண்பர்களே! இதுவும் மாறும் என்பேன். ஞாயிறு அன்று நாளிதழை ‘இந்து தமிழ்’ என்ற தலைப்புடன் பார்த்த எனக்கு மனதுக்குள் நானே பெரும் வெற்றி பெற்றதைப் போன்ற ஒரு பெருமை. நாளிதழ் தலைப்பை இப்போதுதான் நீங்கள் மாற்றினாலும் ‘இந்து தமிழ்’ என்றுதான் வாசகர்கள் கடைகளில் கேட்டு வாங்கிவந்தார்கள். அவர்கள் வார்த்தைகளின்படியே பெயரும் மாறியுள்ளது சந்தோஷத்துக்குரியது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

ஆச்சரியப்படுத்தும் எளிமை

ஜூ

லை 1 அன்று வெளியான ‘கர்நாடகாவில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நீண்ட தொலைவு பயணித்து, அம்மாநில முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி, மூடப்பட்ட தங்கள் பள்ளியை மீண்டும் திறக்க வைத்துள்ளனர்’ என்ற செய்தி கவனத்தை ஈர்த்தது. சிறுவயது மாணவர்களின் தன்னம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அதைவிட, அம்மாணவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினை யைப் பொறுமையாகக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகண்ட முதல்வர் குமாரசாமியின் பண்பும் எளிமையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நமது மாநிலத்தில் இதெல்லாம் சாத்தியமா? ஆட்சிக்கு வர விரும்பும் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு இது என்பதோடு, எளிமையான அணுகுமுறை கொண்ட அரசியல்வாதிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதைத் தமிழக வாக்காளர்களும் உணர வேண்டும்.

- நா. புகழேந்தி, பழனி.

விளையாட்டு இல்லா பள்ளிகள்

கா

ல்பந்து விளையாட்டில் இந்தியா பின்தங்கியிருப்பது பற்றி பேட்டிகள் சில காரணங்களை முன்வைத்துள்ளன. சென்னை நகரைவிடக் குறைவான மக்கள்தொகை கொண்ட உருகுவே, சுவிஸ் நாடுகள் இறுதிச் சுற்றுக்குச் சென்றுவிட்டன. சுவிஸ் நாடு மலைப்பாங்கான குளிர் தேசம் என்பதையும் கவனிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களை அடையாளம் காணச் சொல்லப்படுவது இள வயதில் (catch them young). ஆனால், நம் பள்ளிகளில் விளையாட்டு முக்கியமல்ல. ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தில் விளையாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதையும், தொடக்கப் பள்ளி நிலையிலேயே விளையாட்டில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுத்து, விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதையும் கண்டேன். 10 வயதுக்கும் குறைவான சிறுமிகள் ஜிம்னாஸ்டிக் பள்ளியில் கடுமையான பயிற்சி பெறுகின்றனர். நம் நாட்டில் பெரும்பான்மையான விளையாட்டு வீரர்கள் தம் சொந்த முயற்சியில்தான் வளர்ந்திருக்கின்றனர்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

வேதனையிலும் வேதனை

ன்று டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார சம்பவம் சமூகத்தின் மீது சிறிதும் அக்கறை இல்லாத மிருகங்களால் அரங்கேறியது. அன்றைய அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்தது. ஆனால், இன்று ஜம்முவிலும் உத்தர பிரதேசத்திலும் அதுவே தொடர்வது வேதனையிலும் வேதனை. சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டிய தருணமிது.

- பரமசிவம், மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x