Published : 29 Jun 2018 09:23 AM
Last Updated : 29 Jun 2018 09:23 AM

இப்படிக்கு இவர்கள்: இனியொரு மவுலிவாக்க சம்பவம் வேண்டாம்!

இனியொரு மவுலிவாக்க சம்பவம் வேண்டாம்!

ஜூ

ன் 28-ல் வெளியான ‘மவுலிவாக்க பயங்கரம்: பாடம் கற்றுக்கொண்டோமா?’ கட்டுரை அரசுத் துறைகளுக்கு இருக்க வேண்டிய பொறுப்பை உணர்த்துகிறது. மவுலிவாக்கத்தில் நடந்தது அப்பட்டமான விதிமீறல். தனியாரிடம் உயிர்களைப் பற்றிய அக்கறையை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசுத் துறைக்கு அது அதிகமாக இருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மூதலீட்டில் கட்டப்படும் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிவில் பொறியாளர் மேற்பார்வையிலேயே கட்டப்பட வேண்டும். கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தவறுகள் நேர்ந்தால் அவர்கள் முக்கியப் பொறுப்பேற்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக வேண்டும் என்றால், அரசு, பொறியாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் புதிய மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

கட்டிடத்தின் பாதுகாப்பு அவசியம்

வுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தின் நினைவாக வெளியான ‘மவுலிவாக்க பயங்கரம்: பாடம் கற்றுக்கொண்டோமா?’ கட்டுரை மிக முக்கியமான யோசனைகளை முன்வைத்திருக்கிறது. தகுதியான கட்டிடப் பொறியாளர்களைக் கொண்டு கட்டிடங்களின் உறுதித்தன்மையை உறுதிசெய்வது என்பது மிக முக்கியமானது. மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்குமான உத்தரவாதத்தை உறுதிசெய்வதில் துளியும் சமரசம் கூடாது. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

- ராஜதுரை, சேலம்.

தரவுகள் உயிரற்றவை; மனிதனுக்கு உயிருண்டு

ரவு அறிவியல் பற்றிய கட்டுரை படித்தேன். சமீபத்தில் கேத்தி ஓ நீல் எழுதிய ‘வெப்பன்ஸ் ஆஃப் மேத் டெஸ்ட்ரக்ஷன்’ என்ற நூல் நினைவுக்கு வருகிறது. உயிருள்ள மனிதனை மறந்தும் துறந்தும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளின் அபாயங்களை அந்நூல் விளக்குகிறது. தரவுகள் உயிரற்றவை, உணர்வில்லாதவை. மனிதனுக்கு உயிருண்டு, உணர்வுகளும் உண்டு.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

புதுமைப்பித்தன் கதை: இதயம் கனத்தது

தா

சில்தாரின் மகனாகப் பிறந்து, கல்வியில் தேர்ந்த பட்டதாரியாக வளர்ந்து, ஓரளவுக்கு வசதியுள்ள குடும்பத்தில் ஆளான புதுமைப்பித்தன், தானே விரும்பி தேர்ந்தெடுத்துக்கொண்ட இலக்கியத் துறையில் பல அற்புதப் படைப்புகளை விட்டுச்சென்றிருக்கிறார். அவரின் படைப்புகளை வாசித்து, அவரை முன்னோடியாக நேசித்துப் பின்பற்றிய எண்ணற்ற எழுத்தாளர்கள் சிலர் பின்னாளில் சாதித்துள்ளனர். ஆனால், இவர் வாழ்ந்த காலத்தில் பெருங்கனவுகள் நனவாகாமல், நோய்வாய்ப்பட்டும் எவரும் பெரிதாக உதவ முன்வராததால், போராடி மரணம் தழுவினார் என்பதைப் படித்தபோது கண்ணீர் திரண்டது. சிறுகதை எழுத்தாளரின் பெருங்கனவு கலைந்து, வாழ்க்கையே ஒரு சிறுகதையாய் முடிந்துபோனதை அ.வெண்ணிலா (மரணம் ஒரு கலை) எழுதியதைப் படித்ததும் இதயம் கனத்தது.

- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி .

புத்தகத் தாம்பூலம் வரப்பிரசாதம்

“தே

ங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை” என்ற ஒய்.ஆண்டனி செல்வராஜின் கட்டுரை வாசித்தேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும், ஒரு சிலருக்கு நூலகம் செல்லவோ, புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கவோ நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக இந்தத் தாம்பூலப்பை அமையும். இக்கட்டுரையைப் படிப்போரில் பலர் தங்கள் வீட்டுத் திருமணத் தாம்பூலப் பைகளில் கட்டாயம் ஒரு நல்ல புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுப்பார்கள் என்பது திண்ணம்!

- சுந்தர்.அழகேசன், திருச்சுழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x