Published : 21 Jun 2018 10:32 AM
Last Updated : 21 Jun 2018 10:32 AM

இப்படிக்கு இவர்கள்: சாரு மஜும்தாரை எஸ்.என்.என். சந்திக்கவில்லை!

எஸ்.வி.ராஜதுரை,

மின்னஞ்சல் மூலம்.

சாரு மஜும்தாரை

எஸ்.என்.என்.

சந்திக்கவில்லை!

னது ஆசான்களில் ஒருவரான கோவை ஞானி ‘இந்து தமிழ்’ நாளிதழுக்குத் தந்த நேர்காணலில் (ஜூன் - 20) ஒரு விவரப் பிழை உள்ளது. சாரு மஜும்தாரைச் சந்திக்க எஸ்.என்.நாகராஜன் வரவில்லை. நக்ஸலைட் இயக்கத்தின் மீது தொடக்கம் முதலே கருத்துவேறுபாடு கொண்டிருந்த அவர், அந்த இயக்கம் கடும் அரசு ஒடுக்குமுறையைச் சந்திக்கத் தொடங்கிய காலத்தில் ‘தமிழ்நாடு பொது வுடைமைக் கட்சி’யைத் தொடங்க முயற்சித்துவந்தார். சாரு மஜும்தாரு ட னான உரையாடலானது பெரும்பாலும் புதிய கட்சி அமைப்பைக் கட்டுவதில் ஏற்பட்ட தவறுகள் என்று நாங்கள் கருதியவை தொடர்பானது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களான பாபூஃப், பிளாங்கி போன்றோரின் வழிமுறைகளை மார்க்ஸ், லெனின் ஆகியோர் விமர்சித்தபோதிலும் உழைக் கும் வர்க்கத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்ற வகையில் அவர்களைப் போற்றவும் தயங்கவில்லை. சாரு மஜும்தாரையும் அவரைப் பின்பற்றித் தம் இன்னுயிரை இழந்த, கொடும் ஒடுக்குமுறைக்கு ஆளான பல்லாயிரக்கணக்கானோரையும் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.

ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

ஒதுங்கியிருப்பதா விவேகம்?

ல்லூரி திறக்கும் முதல் நாளே பயங்கர ஆயுதங்களுடன் 50 மாணவர் கள் பிடிபட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வன்முறைக் கலாச்சாரத் தின் பிடியில் இளைஞர்கள் சிக்கியிருப்பதை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகக் கருதக் கூடாது. கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கொண்ட குழு ஆழமாக ஆய்ந்து, இதற்கான காரணங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் ‘மாணவர்களுக்கு அறிவுரை தரக் கூடாதா?’ என்று கேட்டதற்கு, ‘நாங்கள் தலையிட்டால் நாங்களும் தாக்கப்படுவோம் என்பதால், ஒதுங்கியிருப்பதே விவேகம்’ என்று சொல்லும் அளவுக்குத்தான், பேராசிரியர்களின் மனநிலை இருக்கிறது. காவல் துறைக்குத் தெரிந்த ஒன்று எதிர் வன்முறை. அது வன்முறையை வளர்க்கவே செய்யும். அரசும் உயர் கல்வித் துறையும் மௌனம் சாதிப்பது வியப்பை அளிக்கின்றது.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

இன்னும் சத்தமாக ஒலிக்கும்!

கா

ஷ்மீர் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியின் மரணம்குறித்த கட்டுரை யைப் படித்ததும் மனம் கலங்கிவிட்டது (ஜூன் -19). மக்களின் மன உணர்வுகளையும், ஆட்சியாளர்களின் தவறுகளையும், சமூக விரோதிகளின் அநீதிகளையும் வெளிக்கொணர்வதுதானே பத்திரிகை யாளர்களின் உண்மையான பணி. பத்திரிகையாளர் ஒருவருடைய உயிரைப் போக்கிவிட்டால், பத்திரிகைகளின் குரல் ஒடுங்கிப்போகுமா.. போகாது.. இன்னும் சத்தமாகவே ஒலிக்கும்!

சிவ.அய்யப்பன், இராசாக்கமங்கலம்.

வானொலியின் அருமை!

வா

னொலியின் அருமை இன்றும் உணர்வு சார்ந்த ஒரு நேசமாகவே பார்க்கப்பட்டுவருகிறது. கட்டுரையாளரின் எழுத்துகள் உணர்வு வழி காதுகளை அடைந்து, இமை மூடிய ஆனந்த அனுபவிப்பைத் தருகின்றன. வானொலிப் பெட்டியைச் சுற்றியிருந்து கிராமிய நிகழ்வுகளை இரவு நேரத்தில் கேட்ட உணர்வைப் போல இனிமையாக இருந்தது கட்டுரை (ஜூன் - 17).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x