Published : 30 Apr 2018 09:23 AM
Last Updated : 30 Apr 2018 09:23 AM

இப்படிக்கு இவர்கள்: ‘பராக்’ அமைப்புக்குப் பாராட்டுகள்!

ஜெயந்தி ஸ்ரீதரன், வாசகர் வட்டத் துணைத் தலைவர்,

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம்.

‘பராக்’ அமைப்புக்குப் பாராட்டுகள்!

ப்ரல் 28 அன்று வெளியான ‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்துக்கு வழிகாட்டும் பராக்!’ என்கிற தலையங்கம் வாசித்தேன். வாசிப்பை நேசிக்கும் அனைவரின் சார்பாகவும் டாடா அறக்கட்டளையின் ‘பராக்’ அமைப்புக்குப் பாராட்டுகள். மதிப்பெண்களை மட்டுமே துரத்திக்கொண்டு ஓடும் இன்றைய மாணவச் செல்வங் களுக்கு வாசிப்பு என்பது கானல் நீராகவே இருக்கிறது. இதற்குப் பெற்றோர்களும் அல்லவா காரணமாக இருக் கிறோம். ஒருகாலத்தில், தொலைக்காட்சியில் வாசிப்பு தொலைந்துவிட்டது என்றோம். ஆனால் இன்று, அதையும் தாண்டிய அரக்கனாக உருவெடுத்திருக்கும் கையடக்கக் கருவிகளின் ஆதிக்கத்தை என்னவென்று சொல்வது? இத்தகைய சூழ்நிலையில், நம் குழந்தைகளிடம் வாசிப்பை விளையாட்டாகத்தான் கொண்டுசேர்க்க முடியும். வாசிப்பு நாளடைவில் அவர்களின் பழக்கமாக மாறிவிடும். வாசிப்பை முன்னிலைப் படுத்தும் இயக்கத்தை வரவேற்போம். பராக்... பராக்!

செ.சேவியர், வரலாற்றுத் துறைப் பேராசிரியர், திருச்சிராப்பள்ளி.

நாட்டார் தெய்வங்கள் வரலாற்று ஆய்வு

பெ

ரு தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற பாகுபாட்டோடு இங்குள்ள தெய்வங்கள் பிரிக்கப்பட்டு அநீதி நடந்தபோது, நாட்டார் தெய்வங்களுக்கு ‘சனங்களின் சாமி’கள் என்ற பெயர் கொடுத்து, அவை தனித்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபித்தவர் பேராசிரியர் சிவசுப்ரமணியன்தான். ‘தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களை இந்துமயமாக்குதலும், பார்ப்பனிய எழுச்சியும்’ என்ற தலைப்பில், எனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்கையில், எனக்கு அதிகமான தரவுகளை வழங்கியது சிவசுப்ரமணியனின் ஆய்வு நூல்கள்தான் என்பதில் மகிழ்வே. மார்க்சிய பின்புலத்தில் நாட்டார் தெய்வங்களை ஆய்வுசெய்து, அவை அம்மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிகழ்வுகளோடு தொடர்புகொண்டவை என்பதை நிரூபித்தது அவரது சாதனையே. இந்தத் தெய்வங்களுக்குச் செய்யப்படும் பூஜைகள், விழாக்களை உற்றுநோக்கும்போது மிகப்பெரும் உண்மைகள் தெரியவரும். தமிழகத்தின் சமூக வரலாறு பெரும்பாலும் அதன் சமயம் சார்ந்தே இருக்கிறது. இங்கு சமூக விடுதலை என்பது நாட்டார் தெய்வங்களை இந்துமயமாக்கும் சூழலிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான விடுதலை கிடைக்கும். இதற்கான அடித்தளத்தை இட்டது பேராசிரியர் வானமாமலையும், அவரது மாணவருமான பேராசிரியர் சிவசுப்ரமணியனும்தான். இம்மாதிரியான ஆய்வுகள் தொடர வேண்டும். ‘தி இந்து’ வெளியிட்ட ஆதி வள்ளியப்பனின் கட்டுரைக்கு நன்றி.

க. துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

வழிகாட்டிகள்!

டி

.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய ‘சுத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் கிராமங்கள்’ கட்டுரையைப் படித்தேன். எப்பொருளையும் கழிவாக்காமல், பயனுள்ள பொருளாக மாற்றும் வகையில் செயலாற்றும் கிராம ஊராட்சி தலைவர் சுமதி, மகளிர் குழுக்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் பகுதியை மேம்படுத்தி நமக்கெல்லாம் நட்சத்திரமாய் வழிகாட்டுகிறார்கள் என்றால் மிகையாகாது. இக்கட்டுரையைப் படிக்கும்போதே நாமும், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தையும் மாற்ற நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x