Published : 01 Aug 2015 10:48 AM
Last Updated : 01 Aug 2015 10:48 AM

இளம் தலைமுறையினரின் வழிகாட்டி

இந்தியா ஒரு மாபெரும் மகானை இழந்துவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட அணு விஞ்ஞானி, அறம் சார்ந்த மெய்ஞ்ஞானி அவர். அப்துல் கலாம், இந்திய மக்களின் நேயர் மட்டுமல்லர்; உலக மக்களின் உள்ளங்களிலும் குடியேறிய மாசற்ற மாணிக்கம். குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னும் சரி, பின்னும் சரி, மக்களோடு மக்களாகவே வாழ்ந்தவர். இளம் தலைமுறையினரின் ஈடுஇணையற்ற வழிகாட்டி. தனக் கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை. எல்லா அரசியல் கட்சி களும் ஒருசேரப் பாராட்டும் ஒப்பற்ற தலைவர். மத நல்லிணக்கத்தின் மாபெரும் அடையாளம். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அந்த அணுவியல் விஞ்ஞானியின் கனவுகளை நாம் நனவாக்குவோம்!

- ஆறு. மெ. மெய்யாண்டவர், ஓய்வுபெற்ற கல்வியாளர், மின்னஞ்சல் வழியாக

***

கலாமின் கடைசி நிமிடம்

ஸ்ரீஜன் பால் சிங் மிகவும் கொடுத்துவைத்தவர்; கலாம் என்னும் அந்த மாமேதையை குருவாகக் கொண்டதற்கு; அவருடைய கடைசி நிமிடத்தில் அவருடன் இருந்ததற்கு. அப்துல் கலாம் போன்ற ஒரு மாமேதையை, எளிமை, திறமை, நேர்மை அனைத் தையும் ஒருங்கே பெற்ற ஒரு மாமனி தரை இனிமேல் காண்பது அரிது.

- லஷ்மணன்,இணையம் வழியாக….

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x