Last Updated : 23 Mar, 2019 09:46 AM

 

Published : 23 Mar 2019 09:46 AM
Last Updated : 23 Mar 2019 09:46 AM

வாக்குப் பெட்டிகளில் ரொக்கப் பணம்

வாக்காளர்கள், தேர்தலில் வாக்களித்துத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு தேர்தல் ஆணையம் சார்பில் விளம்பரப் படங்கள் வெளியாகின்றன. 1957 பொதுத் தேர்தலின்போது ‘இட் இஸ் யுவர் வோட்’ எனும் பெயரில் பிரச்சாரப் படத்தைத் தயாரித்து வெளியிட்டது தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம். நாடு முழுவதும் மொத்தம் 74,000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்தப் பிரச்சாரப் படம், 13 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லாத வகையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சாரப் படத்தைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அந்தத் தேர்தலின்போது, பெண்களில் 94% பேர் வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.

1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் இந்த முறையும் தனது முத்திரையைப் பதித்தார். தேர்தல் செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்திய அவர், முந்தைய தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 35 லட்சம் வாக்குப் பெட்டிகளைப் பத்திரமாக வைத்திருந்து 1957 தேர்தலில் பயன்படுத்தினார். 5 லட்சம் சொச்சம் வாக்குப் பெட்டிகள்தான் புதிதாக வாங்கப்பட்டன. இப்படிப் பல்வேறு வகைகளில் செலவு குறைந்தது. முந்தைய தேர்தலைவிட சுமார் ரூ.4.5 கோடி அரசுக்கு மிச்சமானது.

சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லாதது அல்லவா தேர்தல்! வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளைத் தவிர, வேட்பாளர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டும் கடிதங்கள், நடிகர்களின் புகைப்படங்கள் என்று என்னென்னவோ கிடந்தன. வாக்குப் பெட்டிகளில் சிலர் ரூபாய் நோட்டுகள், சில்லறைக் காசுகளையும் போட்டிருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x